ஜெயங்கொண்டம் கரடிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம்
உடையார்பாளையத்தில் பகுத்தறிவுக்காகவும், மக்களின் எழுச்சிக்காகவும் பாடுபட்ட ஆசிரியர் வேலாயுதம் (01-07-1910 --- 13-11-1947) சுதந்திரம் அடைந்த மூன்றே மாதத்தில் கழுத்து நெறித்துக் கெலை செய்யப்பட்டு, பலா மரத்தில் நிர்வாணமாகத் தெங்கவிட்ட கெடுமையை சாதி வெறியர்கள் இந்தப் புரட்சி வீரருக்குச் செய்துள்ளார்கள்.அறிவுக் கண்ணைத் திறந்து, பகுத்தறிவு விதையை விதைத்து, சாதி இழுக்கைக் களைவதற்காகப் பாடுபட்டு இயங்கி வந்தர் உடையார் பாளையம் ஆசிரியர் வேலாயுதம் ஆவார்.
இறந்தவருக்காகப் பலரும் வருந்தியிருக்கிறார்கள். ஆனால் கெலை செய்தவர்கள் மிகச் சாதாரணமாக வெளிவந்து விட்டார்கள். பேச்சாற்றலும் செயல் திறனும் உடைய இவர் தன் வீட்டில் தமிழ் வாழ்க தமிழர் வாழ்க என எழுதியதேடு மட்டுமல்லாமல் தன் பள்ளிக்குத் தமிழ்த் தகைமைகளை அழைத்துப் பேசவும் வைத்துள்ளார்.
1947 நவம்பரில் ஒரு திடுக்கிடும் சம்பவம் நடைபெற்றது. உடையார் பாளையம் வேலாயுதம் என்னும் பள்ளி ஆசிரியர் கழகப் பிரசாரம் செய்தார் என்று , அவரை அடித்துக் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டனர். இந்த அக்கிரமத்தைக் கண்டித்து சென்னை மயிலையில் ஈ.வெ.கி. சம்பத் தலைமையில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது. அண்ணா கலந்து கொண்டார்.
No comments :
Post a Comment