Saturday, February 4, 2017

தருமபுரி கலவரம் கருணாநிதிக்கு சில கேள்விகள்

தருமபுரி கலவரம்
கருணாநிதிக்கு சில கேள்விகள்...
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அரசியல்வாதி படுத்திருக்கும்போது கூட காலை ஆட்டிக்கிட்டே படுத்திருக்கணும். இல்லேண்ணா செத்து போயிட்டதா சொல்லி எதிரிங்க பாடை கட்டிடுவாங்கன்னு யாரோ சொன்ன அந்த பயம் கருணாநிதிக்கு வந்துவிட்டதாகவே நாம் நினைக்கிறோம்.
அதனால்தான் சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டேதினம் ஒரு கோமாளித்தனமான அறிக்கையை எழுதி ‡ தான் உயிரோடுதான் இருக்கிறேன் என்பதை நமக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கிறார்.
தருமபுரி கலவரம் குறித்து இவர் எழுதிய அறிக்கைக்கு முரசொலி கொடுத்திருக்கும் எட்டுகால தலைப்பு என்ன தெரியுமா?
""காதல் கண்மணிகளால் வெண்மணிகள் தொடரலாமா?''
இப்படிப்பட்ட வறட்டுத்தனமான வசனங்களை எழுதுவதில் தான் இன்னமும் வற்றாத கூவம் நதிதான் என்பதை தருமபுரி அறிக்கை மூலமும் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

""..... அந்த ஆதிக்க சாதியினர் நத்தம் காலனிக்குள் நுழைந்து தலித் வீடுகள் அனைத்தையும் அடித்து நொறுக்கி பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்திருக்கிறார்கள். அண்ணா நகர் தலித் காலணி மற்றும் கொண்டாம்பட்டி (கொண்டலம் பட்டியாம் கருணாநிதி அறிக்கையில்) தலித் காலனிக்குள் நுழைந்து வீடுகளைக் கொளுத்தினார்கள்'' என்கிறார்.
நத்தம் காலனிக்குள் நுழைந்து; அண்ணாநகர் காலனிக்குள் நுழைந்து; கொண்டலம்பட்டி காலனிக்குள் நுழைந்து என்று எழுதுகிற கருணாநிதியே-
அண்ணாநகர் காலனிக்கும் கொண்டம்பட்டி காலனிக்கும்ட இடையிலே எத்தனை கிலோமீட்டர் தூரம் என்று கருணாநிதிக்குத் தெரியுமா?
தலித் கவிஞர் சுகிர்தாராணி 7 கிலோ மீட்டர் தூரம் என்கிறார் எங்கள் கார் மீட்டர் காட்டியது 6 கிலோ மீட்டர் துரம் என்று.
இது கூட தெரியாமல் -
இந்த கண்ணுல நுழைஞ்சு அந்த கண்ணுல வந்துடுவான் அந்த திருடன் என்று கிராமத்தில் சொல்வார்களே அந்த மாதிரி,
அண்ணா நகர் காலனியில் நுழைந்து கொண்டம் பட்டி காலனியில் நுழைந்து தலித் வீடுகளை கொளுத்தினாங்க என்று - பொய் அறிக்கை எழுதித்தான் உயிரோடு இருக்கிறேன் எனக் காட்டிக்கொள்ள வேண்டுமா மிஸ்டர் கருணாநிதி?
வாய்க்குள்ள ஈ நுழையிறது கூட தெரியாம - உங்க டிவியில மானாட மயிலாட பார்க்கிற சமாச்சாரமா இது?
-
அந்த ஆதிக்க சாதியினர் என்கிறீர்களே அது எந்த சாதி: வெளிப்படையா வன்னிய சாதின்னு சொல்ல உங்களுக்கு என்ன தயக்கம்? சொல்லுங்க... அன்னமிட்ட வீட்டிலேயே கன்னக்கோல் சாத்துறது உங்களுக்கு புதுசா என்ன?
-
வன்னியர் தந்த அபரிமித ஆதரவால்தான்...
திமுக 1967இல் ஆளும் கட்சி அந்தஸ்தைப் பெற்றது. அதனால்தான் அண்ணாத்துரைக்கும் உங்களுக்கும் முதல்வர் என்ற முகவரி கிடைத்தது. அந்த நன்றிக்கு வன்னிய சாதியை ஆதிக்க சாதின்னு நீங்க சொல்லவில்லை என்றால்... அன்னமிட்ட வீட்டிலேயே கன்னக்கோல் சாத்தும் உங்க தொழில் தர்மம் கெட்டுவிடாதா?
முதல்வர் முகவரியை உங்களுக்கு தந்தது வன்னியர் ஆதரவுதான் என்பது உங்களுக்கு தெரியும்.. ஊருக்கு தெரிய வேண்டாமா? அதற்கான ஒரு சின்ன கணக்குதான் பின்வரும் பட்டியல்...
* காங்கிரஸ் கட்சிக்கும், அதிமுகவுக்கும் வன்னியர் பகுதி வழங்கிய ஆதரவைப் போல் சற்று ஏறக்குறைய இரு மடங்கு ஆதரவை திமுகவுக்கு வழங்கிதால்தான் -
1967இல் திமுகஆளும் கட்சி அந்தஸ்தைப் பெற்றது. கருணாநிதிக்கு முதல்வர் என்ற முகவரி கிடைத்தது.
இல்லை என்றால் இன்று முகவரியே இல்லாமல் போன எத்தனையோ சினிமா வசன கர்த்தாக்களைப் போல கருணாநிதி முகவரி இல்லாதவராகி இருப்பார்.
* 1957இல் முதல் தேர்தலில் போட்டியிட்ட திமுக; 20 ஆண்டுகள் கழித்து 1977இல் முதல் தேர்தலில் போட்டியிட்ட அதிமுகவைவிட குறைவான எம்.எல்.ஏக்களையே தென் தமிழ் நாட்டில் பெற்றிருக்கிறது என்பது -
தென்தமிழ்நாட்டினர் திமுகவை தீண்டத்தகாக கட்சியாகவே ஒதுக்கி இருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரமாகும்.
* 1967 முதல் நான்கு முறை தேர்தலில் ஆளும் கட்சியான திமுகவை விட; 1962க்குப் பிறகு ஆளும் கட்சியாகவே வரமுடியாத காங்கிரஸ் தென்தமிழ்நாட்டில் அதிக எம்.எல்.ஏக்களைப் பெற்றிருக்கிறதைவிட திமுகவுக்கு வேறு அவமானம் வேண்டுமா என்ன?
தென்தமிழ்நாட்டைப்போல வடதமிழ் நாட்டில் வன்னியர்கள் திமுக தீண்டத்தகாக கட்சியாக ஒதுக்கியிருந்தால்- திராவிட இயக்கங்கள் என்றோ குழிதோண்டிப் புதைக்கப்பட்டிருக்கும். கருணாநிதியால் முதலமைச்சர் பதவியை கனவில் கூட கண்டிருக்க முடியாது.
கருணாநிதி முதலமைச்சர் ஆனதற்கும்; ஐந்து முறை முதலமைச்சர் பதவி சுகத்தை அனுபவிப்பதற்கும்; நானே தமிழகத்தின் நீண்டகால முதலமைச்சர் என தம்பட்டம் அடித்துக் கொள்வதற்கும் காரணமானவன் வன்னியன். அவன் உட்கார வேண்டிய முதல்வர் நாற்காலியில்உன்னை உட்கார வைத்து திருப்தி கண்டானே அவனா ஆதிக்க சாதி?
இளிச்சவாய் சாதி வன்னிய சாதி என்பதை வஞ்சப்புகழ்ச்சியாக ஆதிக்க சாதி என்று சொல்கிறாயா கருணாநிதி?
வறட்டு வசனம் எழுதுவதில் வற்றாத கூவம் நதியக இருக்கும் உங்களை முதலமைச்சர் ஆக்கிய பாவத்திற்கு ஏராளமான துரோகங்கள் செய்தீர்கள். அது போதாது என்றுதான் -
தருமபுரி கலவரத்துக்காக வன்னியர்களை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய சொல்கிறாயா கருணாநிதி... பரவாயில்லை.
ஒன்றை கருணாநிதி புரிந்துகொள்ள வேண்டும-
அநியாயமா ஒடுக்குனா ஒடுங்கி ஒழிந்து போகிற சாதியல்ல வன்னிய சாதி. எத்தனை வன்கொடுமை பொய் வழக்குப் போட்டாலும் அத்தனையையும் தாங்கி ஓங்கி எழ வன்னியன் தயாராகிவிட்டான்.
வன்னியனின் எதிர்கால எழுச்சியைப் பார்த்து மனம் புழுங்கி நீங்கள் நித்தம் நித்தம் செத்து செத்து பிழைக்கவேண்டும். அதற்காகவாவது நீங்கள் நீண்ட ஆயுளைப் பெற வன்னியர்கள் பிரார்த்திக்கட்டுமா கருணாநிதி?


""தருமபுரி காலனியில் -
பீரோக்களை உடைத்து நகைகளையம் பணத்தையும் கொள்ளை அடித்துவிட்டு பெட்ரோல் ஊற்றி கொளுத்தினார்கள்'' என்கிறார் கருணாநிதி.
தலித்துகள் பீரோக்களை உடைத்து நகைகளையும் பணங்களையும் கொள்ளை அடித்துவிட்டு பெட்ரோல் ஊற்றி வன்னியர்கள் கொளுத்தியது -
கலைஞர் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் பார்த்தீங்களா கருணாநிதி... அல்லது குஷ்பூ நேரடி ஒளிபரப்பில் பார்த்தீங்களா மிஸ்டர் கருணாநிதி?
-
ஆமாம் ஐயா..
தருமபுரி கலவரத்தால் பாதிக்கப்பட்ட தலித்துகள் வீட்டு ஒவ்வொரு பீரோவிலும் கிலோ கிலோவாக தங்க நகைகளும்; கோடி கோடியாக ரூபாய் நோட்டுக்களும் அடுக்கி வைத்திருந்ததை.. இந்த வன்னிய அன்றாடங்காய்ச்சி பசங்க கொள்ளைடிச்சதை எங்கே வச்சு பதுக்குறதுன்னு தெரியாம முழிச்சிகிட்டு கெடக்குறாங்க...
ஸ்விஸ் பேங்குல எப்படி பதுக்குறதுன்னு கொஞ்சம் சொல்லிக் குடுங்களேன் மிஸ்டர் கருணாநிதி!
உங்களுக்கு தெரியலன்னாலும் பரவாயில்ல...
ஃப்ரூட்லாங்வேஜ் பத்தாயிரம் கோடி
டெல்லி தமிழ் மன்னர் பத்தாயிரம் கோடி
கேடி பிரதர்ஸ் - நூறாயிரம் கோடி
-ஸ்விஸ் பேங்குல பதுக்கி வச்சிருக்கிறதா - இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு குமுதம் பத்திரிகை ஒரு கட்டுரையை எழுதுச்சே..
இவங்க யாருன்னு சொன்னிங்கன்னா கூட போதும்... விவரம் கேட்டு ஸ்விஸ் பேங்குல கணக்கு துவங்கி - தருமபுரியில தலித் வீட்டுங்களில் கொள்ளையடிச்ச நகைகளையும் பணத்தையும் அதுல பதுக்கி வைச்சு பொழச்சிக்குவாங்க..
உங்களை முதலமைச்சராக்குனதுக்கு இந்த உதவியைக் கூட செய்ய மாட்டீங்களா கருணாநிதி?
-
அம்பட்டன் குப்பையைக் கிளறுனா அம்புட்டும் மசுரும்பாங்களே அதுமாதிரி.. உங்க அறிக்கையைப் படிச்சா அம்புட்டும் பொய் பொய்யா பொங்கி வழியுதே இதை எங்க கத்துக்கினீங்க கலைஞரய்யா?
(தலித் வீட்டுல 50 ஆண்டுகால சேமிப்பான நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்துக் கொண்டு போய்விட்டார்கள் என திருமாவள வனையும் மிஞ்சி கள்ள ஒப்பாரி வைக்கும் - நல்லகண்ணுவுக்கும்; தா.பாண்டியனுக்கும்; ராமகிருஷ்ணனுக்கும் பழ.நெடுமாறனுக்கும் - இதுதான் பதில்.)

அச்சமில்லை 

1 comment :