Showing posts with label ஜெயங்கொண்டம். Show all posts
Showing posts with label ஜெயங்கொண்டம். Show all posts

Saturday, August 5, 2017

காடுவெட்டி குரு

மாவீரன் காடுவெட்டி குரு


வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு. அவரது சொந்த ஊர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள காடுவெட்டி கிராமம் .
தந்தை காடுவெட்டி ஜெயராமன் தேவர்  தடாலடி பேச்சு மற்றும் பஞ்சயாத்து செய்பவர் துணிச்சல் மிக்கவர்.
1986-ல் காடுவெட்டியில் தி.மு.க-வின் கிளைச் செயலாளராக இருந்தவர் இவர். வன்னியர் சங்கத்தை விரிவுபடுத்துவதற்காக மீன்சுருட்டி எம்.கே.ராஜேந்திரன், விரபோக.மதியழகன் ஆகியோர் குருவை ராமதாஸ் தலைமையில் வன்னியர் சங்கத்தில் இணைத்தனர். பின்பு படிப்படியாக செயற்குழு உறுப்பினர், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டச் செயலாளர் என உயர்ந்தார். பின்பு, வன்னியர் சங்கத் தலைவராக பதவி உயர்வு பெற்றார். 2001-ல் அ.தி.மு.க கூட்டணியில் ஆண்டிமடத்தில் பா.ம.க. சார்பில் நிறுத்தப்பட்டு, முதன் முறையாக சட்டமன்ற உறுப்பினரானார். அதற்கு பிறகு நடந்த 2006 சட்டமன்றத் தேர்தல், 2009 நாடாளுமன்றத் தேர்தல் என அனைத்திலும் தோல்வி. மீண்டும் 2011 ஜெயங்கொண்டத்தில் தி.மு.க கூட்டணியில் வெற்றி பெற்றார். 2016 ஜெயங்கொண்ட சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தார்.

Tuesday, July 11, 2017

ஜெயங்கொண்டம் ஜி.ராஜேந்திரன்

                                                  ஜெயங்கொண்டம் ஜி.ராஜேந்திரன்


ஜி.ஆர் என்கிற ஜி.ராஜேந்திரன்  காங்கிரஸ் கட்சியின் அரியலூர் மாவட்ட தலைவர் நேர்மையானவர்  அனைத்து சமூகத்தவரின் நன்மதிப்பை பெற்றவர்.
 க.ராஜேந்திரன் (வயது 60) அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுகா மீன்சுருட்டி அருகே மேலணிக்குழி கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். இவர், பி.ஏ. படித்து உள்ளார். விவசாயம் செய்து வருகிறார். இவருடைய பெற்றோர் கணபதி-வள்ளியம்மை. ராஜேந்திரனுக்கு கலைசெல்வி என்ற மனைவியும், அசோக் காந்தி, அருண்பாரதி என்ற மகன்களும் உள்ளனர். 1981 முதல் 1989 வரை திருச்சி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவராக இருந்தார். 1996 முதல் 2002 வரை அரியலூர், பெரம்பலூர் மாவட்ட தலைவராகவும், 2013- 2014 வரை மாநில பொதுசெயலாளராகவும் இருந்து உள்ளார். தற்போது அரியலூர் மாவட்ட தலைவராக பதவி வகித்து வருகிறார். மேலும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.ஜெயங்கொண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர்.

Monday, February 6, 2017

தமிழர் நீதிக்கட்சி சுபா இளவரசன்

தமிழர் நீதிக்கட்சி தலைவர் சுபா இளவரசன்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம்  வல்லம்  கிராமத்தை  சேர்ந்தவர் சுபா இளவரசன்.  இவர்  வன்னியர்  சமூகத்தை  சேர்ந்தவர் .தமிழ்நாடு விடுதலைப்படை எனப்படும்  அமைப்பின் தலைவராக விளங்கிய சுபா இளவரசன், கடந்த கால அ.தி.மு.க., அரசின் அதிரடி நடவடிக்கை காரணமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சில ஆண்டு சிறைவாசத்துக்கு பிறகு விடுதலையாகி வெளியே வந்த சுபா இளவரசன், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழர் நீதிக்கட்சி எனப்படும் புதிய அரசியல் கட்சியை துவக்கி செயல்பட்டு வருகிறார் .

Saturday, February 4, 2017

சுண்ணாம்புக்குழி தியாகராஜன்

கங்கைகொண்ட சோழபுரம் திருக்கோயில் அருகே அமரர் சுண்ணாம்புக்குழி தியாகராஜன் திரு உருவ சிலை அமைந்துள்ளது,

சுண்ணாம்புக்குழி தியாகராஜன் இவர் எவருக்கும் அஞ்சாதவர் ,பெரும்  செல்வாக்குடன் வாழந்தவர், S.S.ராமசாமி படையாச்சியார் உடன் கருத்து வேறு கொண்டு  உழைப்பாளர் முன்னேற்ற கட்சி என்ற  தனி கட்சி தொடங்கினர் .பல அரசு அதிகாரிகள்  மற்றும் இவர் சொன்ன சொல்லுக்கு கட்டுப்பட்டு நடப்பாறுகள், இவரின் தயவால் பல சமூக மக்கள் பல வழக்குகளில் காப்பாற்றப்பட்டனர்.


கங்கொண்டசோழபுரம்,ஒரு காலத்தில் இக்கோயிலின் கற்களை அருகில் உள்ள கிராம மக்கள் எடுத்து சென்று வீடு கட்டினர், இக்கோயிலை பற்றி அரசு கண்டு கொண்டதில்லை,ஆனால் தலைவர் சுண்ணாம்புகுழி தியாகராஜன், பொது மக்கள் கற்களை கொண்டு செல்லவதை தடுத்து நிறுத்தினார்,அது மட்டுமில்லாமல் எம்ஜிஆர் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த காரணத்தால் அமைச்சர்களிடம் பாழ் அடைந்த கோயிலிலை பாதுகாக்க,சிறப்பிக்க பல பணிகளை செய்து தர சொன்னார். 




Add caption


எம்ஜிஆர் உடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர், 
எம்ஜிஆர் அவர்களை ஜெயங்கொண்டம் பகுதிக்கு அழைத்து வந்து மாபெரும் மாநாட்டை நடத்திக்காட்டினர்,
1971ஆம் ஆண்டு ஆண்டிமடம் சட்டமன்ற தொகுதியில் திமுக எசு. சதாசிவ படையாச்சி அவர்களை எதிர்த்து போட்டியிட்டு யார் எதிர் பாரவிதமாய் தோல்வி அடைந்தார்.

இவர் மீது கானூர் சாமிக்கண்ணு படையாச்சி மிகுந்த மரியாதையை வைத்து இருந்தார்


அமரர் கோ .
 தியாகராசன் 
அவர்கள் 

திரு உருவ சிலைத்திறப்பு விழா 
முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் ,
பொது செயலாளர் உழைப்பாளர் முன்னேற்ற கட்சி ,
இடம் :கங்கைகொண்ட சோழபுரம்,
தலைமை :N .மாசிலாமணி. MBBS .Ex MLA ,
                   R .மார்க்கபந்து  .BA .Ex  MLA ,

சிலை திறப்பாளர் :மாண்புமிகு பண்ருட்டி S .ராமச்சந்திரன், BE ,
                                      முன்னாள் அமைச்சர்,

முன்னிலை :திரு .S.S.ராமசாமி படையாச்சியார் .MP ,
                       திரு. K .S .கணேசன். MLA ,
                       திரு. S .சிவசுப்ரமணியன்.MA ,BL ,MLA ,   
  
நன்றியுரை :     தியாக .மோகன் 
                          ஊராட்சி மன்ற தலைவர் 

கானூர் சாமிக்கண்ணு படையாட்சி


தலைவர் கானூர் சாமிக்கண்ணு படையாட்சி

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குவதற்காக போராடிய தலைவர்கள் மத்தியில் தனது பதவி அதிகாரத்தைப் பயன்படுத்தி இட ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்திக்காட்டியவர் கானூர் சாமிக்கண்ணு படையாட்சி. 1891 ஆம் ஆண்டு சின்னத்தம்பி-சிவகாமி இணையருக்கு மகனாகப் பிறந்தவர்.இவரின் சொந்த ஊர் உடையார்பாளையம் அருகிலுள்ள வாரியங்காவல் ஆகும். இவரது தந்தை காலத்தில் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்புக்கு அருகிலுள்ள கானூர் கிராமத்திற்கு இடம் பெயர்ந்தனர்.சாமிக்கண்ணு தேவங்குடியிலுள்ள தன் தாய் மாமன் வீட்டில் தங்கி விளாகம் பள்ளியில் தொடக்கக்கல்வி பயின்றார்.அப்போது அங்கு காலரா நோய் பரவியதனால் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு கானூருக்கு வந்துவிட்டார்.அதன் பிறகு அவர் படிக்கவே இல்லை.மூன்றாம் வகுப்போடு அவர் கல்வி முடிந்து போனது. கானூரில் மணியக்காரராகப் பொது வாழ்வைத் தொடங்கிய சாமிக்கண்ணு 1946 இல் சிதம்பரம் தாலுக்கா போர்டு தலைவரானார். 1952 இல் சென்னை சட்டமன்றத் தேர்தலில் உழைப்பாளர் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். 1953 இல் விருத்தாசலம் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதே கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினரான பிறகு அவரது புகழ் பரவத்தொடங்கியது. 1955 இல் தென்னார்க்காடு மாவட்ட நாட்டாண்மைக்கழகத் தலைவராகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப் பெற்றார். அவரது பதவிக்காலத்தில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட இளைஞர்கள் பலருக்கு வேலைவாய்யபை வழங்கினார். இவரது பதவிக்காலத்தில் ஒரு முறை ஆசிரியர் பணிக்கு நேர்காணல் நடத்தவேண்டிய சூழல்.மாவட்டத் தலைநகருக்கு நேர்காணலுக்கு வந்தவர்களை கானூருக்கு வரும்படி கூறிச் சென்றுவிட்டார். பணிநாடுநர்களும் அங்கு சென்றுள்ளனர். களத்துமேட்டிற்கு அழைத்துச் சென்று வயலில் இறங்கி நாற்றரிக்கச் சொன்னாராம். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இளைஞர்கள் வயலில் இறங்கி நாற்று அரிக்கத் தொடங்கவிட்டனர் உயர்சாதி இளைஞர்கள் வரப்பிலேயே நின்றுகொண்டிருந்தனராம்.அவர்களைப் பார்த்து சாமிக்கண்ணு கூறினாராம்," இவ்வளவு நாளா நீங்க நாற்காலியில உக்காந்திருந்தீங்க இவனுவோ நாத்தரிச்சிகிட்டு கெடந்தானுவோ, இவன்லாம் இப்படியே கெடக்க வேண்டியதுதானா? இவனும் கொஞ்சம் நாளைக்கு நாற்காலியில உக்காந்து பார்க்கட்டும் நீங்க வீட்டுக்கு போங்க" என்று அனுப்பி வைத்தாராம். இவரது பதவிக்காலத்தில்தான் இம்மாவட்டத்தில் பல பள்ளிகள் திறக்கப்பட்டன. கிராமங்களில் தொடங்கப்பள்ளி, நகரங்களில் உயர்நிலைப்பள்ளி என்பது இவரது இலக்காக இருந்தது. பழமையான பல பள்ளிக் கட்டடங்களின் கல்வெட்டுகளில் இவர் பெயர் இடம்பெற்றிருப்பதை இன்றும் காணலாம். சாலை வசதிகள், குடிநீர் வசதி, மருத்துவ வசதி என ஏழை எளிய மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்தார். இவர் பதவிக்காலத்தில்தான் விருத்தாசலத்திலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் வெள்ளாற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்டப்பட்டது. அப்பாலம் இன்றுவரை மக்களுக்கு பயன்பட்டது. தற்போதுதான் அது மேம்பாலமாக மாற்றப்பட்டு வருகிறது. 1957 இல் திருமுட்டம் பேரூராட்சித் தலைவராக மூன்றரை ஆண்டுகள் பதவி வகித்தார்.உடையார்பாளையம் ஜமீன்தார் காலத்திற்குப் பிறகு ஓடாத திருமுட்டம் கோயில் தேரை இவரது பதவிக்காலத்தில்தான் ஓட வைத்தார். 1962 இல் செயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். 1967 இல் கானூர் ஊராட்சிமன்றத் தலைவராகப் பதவி வகித்தார். வாழ்நாள் முழுதும் மக்களுக்கு தொண்டு செய்தாலும் விவசாயப் பணியைக் கைவிட்டதில்லை. அரசியலில் ஈடுபடுபவர்கள் சொந்தமாக ஏதேனும் தொழில் செய்தால்தான் பொதுவாழ்வில் தூய்மையைக் கடைபிடிக்க முடியும் என்பது அவரின் கொள்கை. அதிகாரிகளுக்கு அஞ்சாமல் ஒன்றுக்கும் உதவாத விதிமுறைகளை மீறி ஏழை எளிய மக்களுக்கு உதவுவதில் அவருக்கு நிகர் அவரே. படித்த பலரைத் தேடி வேலைவாய்ப்பை வழங்கி விட்டு பின்னர் நியமன ஆணையை அனுப்பி வைப்பாராம். இத்தகைய பல சிறப்புகளைப் பெற்ற மக்கள் தலைவர் சாமிக்கண்ணு 1984 இல் இயர்கை எய்தினார். கடலூர் மாவட்டத்தில் இன்று ஓய்வூதியம் பெறும் பல ஆசிரியர்கள் கானூர் சாமிக்கண்ணு படையாட்சியால் பணியமர்த்தப் பட்டவர்கள் என்பதை அவர்களே கூறக் கேட்டிருக்கிறேன். இது போன்ற தலைவர்கள் நமக்கு இப்போது கிடைப்பார்களா என்ற ஏக்கம் மனதுக்குள் எழுகிறது.


நன்றி: சாவடிகுப்பம் திரு. ந.இராமலிங்கம்.எம்.ஏ.எட்.,

ஜெயங்கொண்டம் அழகர் கோயில்

சலுப்பை  அழகர் கோயில்  வான்நின்று  வாழ்த்தும் 
எங்கள் இதய தெய்வம் தெய்வத்திரு படையாட்சி  .சீனுவாச தேவர் அவர்களின் முன் முயற்சியாலும் நல்லாசியாலும் நடைபெறும் மாக கும்பாபிஷேக பெருவிழா 1-06-2014 ஞாயிறு

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரம்  அருகே சலுப்பை கிராமத்தில் இக்கோயில் அமைந்துள்ளது

மீன்சுருட்டியில் இருந்து 4.50கிலோமீட்டர் தூரம்
கங்கைகொண்டசோழபுரம் இருந்து 5.80கிலோமீட்டர் தூரம்

ஜெயங்கொண்டம் to சலுப்பை  அழகர் கோயில் 12 கிலோமீட்டர் தூரம்




உடையார் பாளையம் வேலாயுதம்

ஜெயங்கொண்டம்  கரடிக்குளம் கிராமத்தை  சேர்ந்தவர் வேலாயுதம்

உடையார்பாளையத்தில் பகுத்தறிவுக்காகவும், மக்களின் எழுச்சிக்காகவும் பாடுபட்ட ஆசிரியர் வேலாயுதம் (01-07-1910 --- 13-11-1947) சுதந்திரம் அடைந்த மூன்றே மாதத்தில் கழுத்து நெறித்துக் கெலை செய்யப்பட்டு, பலா மரத்தில் நிர்வாணமாகத் தெங்கவிட்ட கெடுமையை சாதி வெறியர்கள் இந்தப் புரட்சி வீரருக்குச் செய்துள்ளார்கள்.

அறிவுக் கண்ணைத் திறந்து, பகுத்தறிவு விதையை விதைத்து, சாதி இழுக்கைக் களைவதற்காகப் பாடுபட்டு இயங்கி வந்தர் உடையார் பாளையம் ஆசிரியர் வேலாயுதம் ஆவார்.

இறந்தவருக்காகப் பலரும் வருந்தியிருக்கிறார்கள். ஆனால் கெலை செய்தவர்கள் மிகச் சாதாரணமாக வெளிவந்து விட்டார்கள். பேச்சாற்றலும் செயல் திறனும் உடைய இவர் தன் வீட்டில் தமிழ் வாழ்க தமிழர் வாழ்க என எழுதியதேடு மட்டுமல்லாமல் தன் பள்ளிக்குத் தமிழ்த் தகைமைகளை அழைத்துப் பேசவும் வைத்துள்ளார்.



1947 நவம்பரில் ஒரு திடுக்கிடும் சம்பவம் நடைபெற்றது. உடையார் பாளையம் வேலாயுதம் என்னும் பள்ளி ஆசிரியர் கழகப் பிரசாரம் செய்தார் என்று , அவரை அடித்துக் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டனர். இந்த அக்கிரமத்தைக் கண்டித்து சென்னை மயிலையில் ஈ.வெ.கி. சம்பத் தலைமையில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது. அண்ணா கலந்து கொண்டார்.