Showing posts with label இந்திய விடுதலைப் போராட்ட தியாகிகள். Show all posts
Showing posts with label இந்திய விடுதலைப் போராட்ட தியாகிகள். Show all posts

Saturday, March 18, 2017

கடலூர் அஞ்சலையம்மாள்

கடலூர் அஞ்சலையம்மாள்

 கடலூர் அஞ்சலையம்மாள் ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை. இவர் 1890 ஆம் ஆண்டு கடலூரில் உள்ள முதுநகரில் எளிமையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார். 1921 ஆம் ஆண்டு மகாத்மா காந்திஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கியப் போதே, அஞ்சலையம்மாளும் தமது பொது வாழ்க்கையைத் தொடங்கினார். நீலன் சிலையை அகற்றும் போராட்டம், உப்புக் காய்ச்சும் போராட்டம், மறியல்போராட்டம், தனியாள் அறப்போராட்டம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகிய அனைத்துப் போராட்டங்களிலும் கலந்து கொண்டு பல ஆண்டு சிறையில் வாடினார்.இந்திய விடுதலைப் போராட்ட  வீரர்கள் 

பாரதி, பெண் விடுதலைக்கு அறைகூவல் விட்ட காலகட்டத்தில் பெண் விடுதலையை விட தாய்நாட்டின் விடுதலை முக்கியம் என்று களத்தில் குதித்தவர் தென்னார்க்காடு மாவட்டத்தின் தெய்வத்தாய் என்றும் வேலு நாச்சியார் என்றும் போற்றப்படும் திருமதி.அஞ்சலை அம்மாள் அவர்கள். 1921ல் இந்திய சுதந்திரப் போர் அரங்கில் இறங்குகிறார். சாதாரண நெசவு குடும்பத்தில் பிறந்தவர். குறைந்த படிப்பறிவு இருந்தாலும் அறிவும் துணிவும் அனுபவமும் எப்படி வந்திருக்கும்? இவை இந்த சமூகம் பாய்ச்சிய வீர ரத்தத்தின் வெளிப்பாடு அல்லவா! 


”விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை 
வீரப்பெண்கள் விரைவில் ஒழிப்பாராம்” - என்று பாரதி முழங்கிய கனவை நனவாக்கியவர் அல்லவா இவர். சமகால பெண்ணிய எழுத்தாளர் அம்பை மிகவும் ஆதங்கத்துடன் ஒரு கதையில் சொல்வார் -இந்தப் பெண்கள் அறிவையும், திறமையையும், சமையலறையிலே முடக்கி வைத்துக் கொள்கிறார்களே - தோராயமாக ஒரு பெண்ணின் ஆயுள் காலத்தில் 2,92,000 தோசை சுடுபவளாக இருக்கிறாளே! ஆனால், சென்ற நூற்றாண்டின் தொடக்கத்திலேயே மரபு என்னும் விலங்கை உடைத்தெறிந்துவிட்டு வாழ்வு என்பது குடும்ப வாழ்வு மட்டுமல்ல, சமுதாய வாழ்வும்தான் என்று முழங்கி குடும்பத்தினருடான் வீதியில் இறங்கியவர் அஞ்சலை அம்மாள்.

ஆம், இவர் நேருவின் குடும்பம் போல என்று சிலர் சிலாகித்து எழுதுகின்றனர். பேசுகின்றனர். ஆனால், இவர்கள் இன்னும் ஒருபடி மேல் என்று நம்மால் அடித்துச் சொல்ல முடியும். நேருவுக்கு பொருளாதார பலம் இருந்தது. குடும்பமும் சிறிய குடும்பம்தான். ஆனால், இவர் குடும்பமோ பெரிய குடும்பம். பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கிய குடும்பம். அன்றைய உழைப்புதான் அன்றைய சாப்பாடு என்றிருக்கும் போது எந்த துணிவில் அவர் சுதந்திர போரில் இறங்கியிருப்பார்? அதுவும் அந்த காலத்தைச் சேர்ந்த பெண்! பெண்களை நான்கு சுவர்களுக்குள்ளேயே வைத்து வெட்டி வீரம் பேசும் சமூகம்! ஆய்வுக்குரிய சிந்தனையாக எடுத்துக் கொள்ளவும். அமெரிக்க பெண்கள் விடுதலை போராட்ட வீராங்கனை பெட்டி ஃப்ரைடன் நீண்ட நாள் போராட்ட அனுபவத்திலிருந்து சொல்வது - “ஆண்கள் ஒரு தனி வர்க்கமல்ல. பெண்கள் ஒரு தனிவர்க்கமல்ல. பெண்கள் மட்டும் தனியாக முன்னேறலாம் என்று நினைப்பது தவறு”. தான் மட்டுமல்லாமல், கணவருடன், குழந்தைகளுடன் போராட்டத்தில் இறங்குகிறார்.


கணவர் - முருகப் படையாச்சி
பெண் - லீலாவதி
மகன்கள் - காந்தி,ஜெயில்வீரன்(தற்போது ஜெயவீரன்) 

கர்ப்பிணியாக சிறைபுகுந்து பேறுகாலத்தில் அனுமதியுடன் வெளியே வந்து ஆண் மகவுடன் மறுபடியும் சிறை புகுகிறார், சிறை அதிகாரிகள், ஜெயில் வீரன் என்று குழந்தைக்கு பெயரிட்டு இப்போது ஜெயவீரனாக கடலூரில் வசிக்கிறார். 

எப்படி ஒரு பெண்ணால் இது சாத்தியமாயிற்று?

“நாங்கள் இந்தியப் பெண்மணிகள்
நாங்கள் மலரினும் மென்மையானவர்
நாங்கள் சுட்டெரிக்கும் தீச்சுடர்கள்” - என்ற ஒரு பெண் கவிஞரின் பாடல்வரிகள்தான் நினைவுக்கு வருகிறது. இந்திய விடுதலைக்காக தீவிரவாதியாக மாறிய மாடம் காமா, நீண்ட நாட்கள் தலைமறைவாக இருந்து போராடிய அருணா ஆசிப் அலிக்கும் சற்றும் குறைந்தவரல்லர் அஞ்சலை அம்மாள்.


1921 - சுதந்திர போராட்டத்தில் இறங்குகிறார்.
1927 - நீலன் சிலை அகற்றும் போரில் ஒரு வருடம் சிறை தண்டனை - சென்னையில்
1931 - உப்புக்காய்ச்சல் போராட்டத்தில் ஆறுமாத சிறை தண்டனை - கடலூரில்
1933 - மறியல் போரில் மூன்று மாத சிறை - கடலூரில்
1940 - தனி நபர் சத்தியாகிரகத்தில் முதலில் 6 மாதம்
1940 - 18 மாதங்கள் - வேலூர்
1943 - 8 மாதம் 2 வாரம் - பெல்லாரி

ஆக, நான்கு வருடம் ஐந்தரை மாதம் சிறைவாசம். தமிழ்நாட்டில் முதன் முதலில் சத்தியாகிரகத்தில் சிறை புகுந்த பெண்கள் என்ற பெருமைக்குரியவர்கள் : 

1. அஞ்சலை அம்மாள்
2. மதுரை பத்மாசனி அம்மாள்

கள்ளுக்கடை இருக்குமிடமெல்லாம் அச்சிட்ட (குடியை கைவிடத் தூண்டும்) நோட்டீஸ்களை வழங்கிக் கொண்டே அஞ்சலை அம்மாள் மறியல் செய்வார். சென்னையில் தடைவிதிக்கப்பட்ட காங்கிரஸ் மகாநாட்டுக்கு தலைமை தாங்கி ஒரு பெண்கள் படையுடன் அஞ்சலையம்மாள் கைதானார். பிறகு ஜில்லாபோர்டு உறுப்பினராகவும், சென்னை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து 20-06-1961 இல் அமரரானார். 

இவருடைய மகள் அம்மாப்பொண்ணு என்கிற லீலாவதி (காந்தி இட்ட பெயர்) 
தன்னுடைய 9வது வயதில் நீலன் என்ற கொடுங்கோலன் சிலையை அகற்றுவதற்காக தாயுடன் சென்னை வந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இவர்களுடன் தந்தையும் போராடும் போது அனைவரும் கைது செய்யப்பட்டு லீலாவதி செனனி சிறுமியர் இல்லத்தில் நான்கு ஆண்டுகள் தங்கியிருக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிடுகிறார். 1931ல் விடுதலையான பிறகு காந்தியின் வார்தா ஆசிரமத்தில் நான்கு ஆண்டுகள் தங்கியிருந்து சேவையில் ஈடுபட்டார். 

இவருடைய கண்வர் திரு.ஜமதக்னி வேலூர் மாவட்டத்தில் காவேரிப்பாக்கத்தில் உள்ள கடப்பேரி என்ற சிற்றூரில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தவர். காந்தியடிகளில் முதல் இயக்கம் முதல் இறுதி இயக்கம் வரையில் எல்லாவற்றிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். ஒன்பது ஆண்டுகள் சிறையில் கழித்தவர். தமிழ்,ஆங்கிலம்,இந்தி, சமஸ்கிருதம் போன்றவற்றில் புலமை பெற்று பல விருதுகளை குவித்தவர். ஜமதக்னி அவர்களின்நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைப் பற்றி ஆர்வியின் தளத்தில் காணலாம். 
இவர்களுடைய புதல்வி திருமதி.சாந்தி பெரியார் சிந்தனையில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்று சென்னையில் வசிக்கிறார்.

ஆக, இவ்வளவு தியாகங்கள் செய்த குடும்பம் வரலாற்று ஏடுகளில் எங்கே உள்ளது? இந்த சரித்திர சுவடுகள் பெண்களை ஒதுக்கி வைத்திருக்கிறது. தமிழ்நாட்டில்/ தென்மாவட்டத்தில் சுதந்திரபோராட்டத்திற்கு பங்களித்த எத்தனை பெண்கள் உடனே நம் நினைவுக்கு வருகின்றனர்? பெண்களின் போராட்டங்களை இந்த சமூகம் மறைக்கிறது அல்லது மறக்கிறது! 

சிறையில் அடைபட்டிருக்கும்போது கடலூரில் அஞ்சலை அம்மாளின் வீடு ஏலத்திற்கு வந்தபோது, ஒரு முஸ்லீம் குடும்ப நண்பர் சமயத்தில் உதவி செய்கிறார். அஞ்சலை அம்மாளின் குழந்தைகளை சரியாக படிக்க வைக்க முடியவில்லை. பொருளாதார பிரச்சினை ஒரு புறம், பாதுகாப்பின்மை ஒரு புறம் - அதன் தாக்கம் அந்த குடும்பத்தின் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் தொடர்கிறது.

அரசர்களுக்கும், முதலாளித்துவ வர்க்கத்திற்குமே சரித்திரம் சொந்தமானது என்றால் சாதாரண அஞ்சலை அம்மாக்களின் தியாகத்தை யார் சொல்வது? யார் இதை வருங்கால சந்ததியினருக்கு எடுத்துரைப்பது? யார் யாருக்கோ சிலை நிறுவும் அரசாங்கம் அவர்களை எப்படி மறக்கலாம்?இவர்கள் சாதி, மதங்கள் தாண்டி வெளியில் வந்து போராடியவர்கள் ஆயிற்றே! History என்பது his-story மட்டுமல்ல her-storyயையும் உள்ளடக்கியது தானே! அரசு செய்ய மறந்தால் அல்லது மறுத்தால் இந்த சமுதாயமாவது அன்னாருக்கு சிலையெடுத்து சரித்திரத்தை திரும்பி பார்க்க வைக்கட்டும்!


சென்னை சர்தார் பு.மு.ஆதிகேசவ நாயகர்

சென்னையின் சர்தார் திரு ஆதிகேசவலு நாயகர்  

திரு.சீனிவாச அய்யங்கார் தலைமையில்  சென்னை கடற்கரையில் திலகர்  கூட்டத்தில் மகாத்மா காந்திஜிக்கு வரவேற்பு இதழை ஆர்வத்துடன் படித்து அளிக்கிறார் திரு.ஆதிகேசவலு நாயகர்

திரு எஸ்.சீனிவாச அய்யங்கார் தலைமையில், சென்னை மெரினா கடற்கரையில் திலகர் கட்டத்தில் மகாத்மா காந்திஜிக்கு வரவேற்பு இதழை ஆர்வத்துடன் படித்து அளிக்கிறார் "சென்னையின் சர்தார்" திரு ஆதிகேசவலு நாயகர்


இவர் பெயருக்கு முன்னாள் இருக்கும் சர்தார் பட்டம் ஆங்கில அரசு வழங்கியதல்ல .  இவரது துணிவையும் மக்கள் சேவையும் பாராட்டி மாகத்மா காந்தி வழங்கிய பட்டமாகும் . தமிழகத்தில் ஐவரும் சர்தார் வேதரத்தினம் பிள்ளையும் காந்தியிடம் இப்பட்டத்தை பெற்றவர் இருவர் ஆவர் .
ஆதிகேசவ நாயகர் தனது 27 வது வயதிலேயே  -
1.மதராஸ் சதர்ன் மராட்டா ரயில்வே யூனியன்
2.சதர்ன் ரயில்வே யூனியன்
3.ரயில்வே யைங்க்மன் யூனியன் ஆகிய முன்று தொழிழ்ச்சங்கங்களை தோற்றுவிட்டு அவைகளின் தலைவராகி தொண்டாட்டாற்றியவர் .
    1921 இல் பம்பாய் சென்று காந்தியடிகளை சந்தித்து தமிலகத்திருக்கு அழைத்துவந்து மெரீனா கடற்கரையில் பொதுக்கூட்டம் நடத்தினார். காந்தியடிகளை அறிமுகம் செய்து வைத்து வரவேற்புரை நிகழ்த்தியவர் ஆதிகேசவ நாயகர்.
மீண்டும் சிறையில் இருந்து விடுதலையான  காந்தியை சென்னைக்கு அழைத்து வண்டு 21.12.33 அன்று ராபின்சன் பூங்காவில் சிறப்பான வரவேற்பு கொடுத்தார் . காந்தியின் ஆங்கில உரையை தமிழாக்கம் செய்தார்.
1921, 36  ஆகிய ஆண்டுகளில் நேரு தமிழக சுற்றுபயணம் மேற்கொண்ட போது; அவருடன் தமிழகம் முழுவது பிரச்சாரம் செய்தவர் நாயகர் .

காந்தியடிகள் அறிவிட்ட வரிகொடா இயக்கத்தை தீவிரமாக ஆதரித்து சென்டிரல் ரயில் நிலையம் அருகில் இருந்த தனது நூற்றுகணக்கான ஏக்கர்களுக்கு வரிக்கட்ட மறுத்ததால் அந்த நிலங்களை அரசு எடுத்து கொண்டது . அந்த நிலங்களின் இன்றைய மதிப்பு பல ஆயிரங்கோடி.
காந்தியடிகள் அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் தீவீரமாக பங்காற்றி பல முறை சிறை சென்றுள்ளார். இவர் மொத்தம் 11  ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துள்ளார். காமராசரே கூட 9  ஆண்டுகள் மட்டுமே சிறை தண்டனை அனுபவித்தவர் என்பது குறிப்பிடதக்கது .

விடுதலைப் போராட்ட தியாகிகளின் பெயர் இருட்டிப்பு

முதல்வர் ஜெயலலிதாவின் சுதந்திரதின உரையில் வன்னிய தியாகிகள் இருட்டடிப்பைக் கண்டிக்கிறோம்.
------------------------------------------------------------------------------------------------------------
இந்தியாவின் 66ஆவது சுதந்திரதினமான 15.08.2012 அன்று சென்னை கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து முதல்வர் ஜெயலலிதா ஆற்றிய உரையின் ஒரு பகுதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

“....65 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேய அடிமைத்தனத்தை தகர்த்தெறிய நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு மகத்தானது.

ஆங்கிலேயருக்கு எதிராக வீர முழக்கமிட்ட நெற்கட்டும் சேவல் பூலித்தேவன்; தூக்குமேடை ஏறிய வீரபாண்டியக் கட்டபொம்மன்; தாயின் மணிக்கொடி காக்க உயிர்துறந்த திருப்பூர்க் குமரன்; வீரத் தழும்புகளை விருதுகளாய் சுமந்த மருது சகோதரர்கள்; வீரமங்கை வேலு நாச்சியார்; மாவீரன் வாஞ்சிநாதன்; விடுதலைப் போராளி தில்லையாடி வள்ளியம்çம் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார்; தம் கவிதைகள் மூலம் விடுதலை உணர்வூட்டிய மகாகவி பாரதி; நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வழிவந்த சுதந்திரப் போராட்டத் தியாகி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்; தீரர் சத்தியமூர்த்தி; சுப்பிரமணிய சிவா; தீரன் சின்னமலை; மாவீரன் அழகுமுத்துக்கோன்; பெருந்தலைவர் காமராசர்; தந்தை பெரியார் என இந்திய விடுதலைக்காகப் போராடிய எண்ணற்ற தியாக சீலர்களைப் போற்றி வணங்குகிறேன்.”

ஒரு மாநிலத்தின் முதல்வர் சுதந்திரதின விழாவில் பேசுகிற பேச்சில் இந்திய விடுதலைக்காகப் போராடிய தியாகிகளின் பெயர்ப்பட்டியல் இடம்பெறும்போது:

முழுமையானதாகவும்; உண்மையான தியாகிகளின் பெயர்ப்பட்டியலாகவும்; விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதாகவும் இருக்க வேண்டும்.

முதல்வரின் சுதந்திரதின விழா பேச்சு என்பது - அரசியல் கட்சி மேடைப்பேச்சாளிகளின் பொறுப்பற்ற பேச்சாக இருந்துவிடக் கூடாது என்பது அதைவிட முக்கியம்.

2012 சுதந்திரதின விழாவில் முதல்வர் ஜெயலலிதா வாசித்த பேச்சு ஒரு கட்சியின் மேடைப்பேச்சாளி ஒருவனின் பொறுப்பற்ற பேச்சாக இருந்தது என்பதுதான் அவலம்.

பூலித்தேவன்
கட்டபொம்மன்
மருது சகோதரர்கள்
வேலுநாச்சியார்
தீரன் சின்னமலை
அழகுமுத்துக்கோன்

முதல்வர் ஜெயலலிதாவின் சுதந்திர தின விழா பேச்சில் இவர்கள் எல்லோரும் இந்திய விடுதலைக்காகப் போராடிய தியாக சீலர்கள் என்று பட்டியலிடப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் இந்திய விடுதலைப் போராட்ட தியாகிகளா?
வெள்ளையர்களால் தங்கள் ஆட்சிக்கு நெருக்கடி வந்தபோது தங்கள் ஆட்சியைக் காத்துக் கொள்ள வெள்ளையர்களை எதிர்த்துப் போராடிய வர்கள் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை.
வெள்ளையனே வெளியேறு என போராடினார்களா?
இவர்கள் போராட்டங்கள் தங்கள் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள நடந்த போராட்டங்களே தவிர வெள்ளையனே வெளியேறு என இந்திய தேச விடுதலைக்காக நடந்த போராட்டமல்ல
எனவே இவர்களை இந்திய விடுதலைப் போராட்ட தியாகிகள் எனச் சொல்வது வரலாற்றுப் பிழை.
#
அடுத்த பிழை-

பெரியாரை இந்திய விடுதலைப் போராட்ட தியாகிகள் பட்டியலில் சேர்த்தது. இது அறிந்தே செய்த பிழை என்றே கருதுகிறோம்.
1926 ஆம் ஆண்டிலேயே பெரியார் காங்கிரசைவிட்டு வெளியேறிவிட்டார். அது கூட பரவாயில்லை. விலகியபின் விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக செயல்பட்டு வந்த நீதிக்கட்சியோடு சேர்ந்துகொண்டு # இந்திய விடுதலை இயக்கத்திற்கு எதிராகச் செயல்பட்டவர்.

அது மட்டுமல்ல -
இந்திய விடுதலைப் போராளிகளின் தியாகத்தால் பெற்ற சுதந்திர தினத்தை துக்க தினமென அறிவித்தவர்.
இவரை இந்திய விடுதலைப் போராட்ட தியாகி என போற்றுவதும் வணங்குவதும் - உண்மையான இந்திய விடுதலைப் போராட்ட தியாகிகளை அவமதிக்கும் செயலாகும். இதனை இந்திய போராட்ட தியாகிகளின் ஆவி கூட மன்னிக்காது.

விடுதலைப் பேராட்ட தியாகிகளின் பெயர்ப் பட்டியலில் காமராசர் பெயர் இடம் பெற்றிருக்கிறது. ஆனால் அவரைவிட அதிக காலம் சிறைத் தண்டனையை அனுபவித்த - ஆதிகேசவ நாயகர் பெயரோ; தென்னிந்திய பெண் போராளிகளில் அதிக கால சிறை தண்டனையை தன் கணவரோடும் குடும்பத்தோடும் அனுபவித்த பெண் போராளியான அஞ்சலையம்மாளையும் ஜமதக்னியையும் தியாகிகள் பட்டியலில் சேர்க்காதது ஏன்? அவர்கள் வன்னியர்கன் என்பதாலா? அல்லது - முதலமைச்சர் ஆனவர்களுக்குத்தான் தியாகிகள் பட்டியலில் இடமளிக்கும் தகுதி உண்டு எனக் கருதுகிறாரா?

அடுத்தது தில்லையாடி வள்ளியம்மை

இவர் தென்னாப்பிரிக்கா வாழ் இந்தியர்களின் நல்வாழ்விற்காக - காந்தியடிகள் நடத்திய சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் நீத்தவர்.
இவரும் கூட இந்திய விடுதலைக்காக இந்தியாவில் வெள்ளையர் ஆட்சியை எதிர்த்துப் போராடியவர் அல்ல. தென்னாப்பிரிக்க வெள்ளையர் ஆட்சியில் இந்தியருக்கு உரிமை கேட்டுப் போராடியவரே.
இவரை இந்திய விடுதலைப் போராளிகள் பட்டியலில் சேர்த்ததும் கூடப் பிழையானதே.
தென்னாப்பிரிக்கா வாழ் இந்திய மக்களுக்காக போராடிய தியாகி என்பதால் இவரை தியாகிகள் பட்டியலில் சேர்த்ததைக் கூட ஒருவகையில் ஏற்கலாம்.

ஆனால் இவர் ஒருவர்தான் தென்னாப் பிரிக்காவில் வாழும் இந்தியர்களுக்காகப் போராடிய தியாகியா?
தென்னாப்பிரிக்காவாழ் இந்தியர்களின் நலனுக்காக நடத்தப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் வெற்றி பெற்றதற்கு -
தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரம் என்ற நூலில் காந்தியார் மூன்று தியாகிகளின் பெயர்களைப் பட்டியலிடுகிறார்.

1.நாகப்பன் படையாட்சி 2.நாராயணசாமி 3.தில்லையாடி வள்ளியம்மை
இதுவே காந்தியடிகளின் தியாகப்பட்டியல்.
தமிழகத்தை தட்டி எழுப்ப இந்த மூன்று பெயர்களையும் தாரக மந்திரமாக தமிழகப் பிரச்சாரங்களில் பயன்படுத்தினார்
- (1969இல் வெளியான தமிழ்நாட்டில் காந்தி என்ற நூல் பக்கம் 252).

இந்த மூவரில்-
தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகப் போராட்டத்தில் முதல் பலியாகிய முதல் தியாகி நாகப்பன் படையாட்சியே. சிறைக்கொடுமை காரணமாக இவர் இறந்தது - 6.7.1909.

தென்னாப்பிரிக்கா சத்தியாக்கிரப் போராட்டத்தில் இரண்டாவதாக பலியான இரண்டாவது தியாகி - நாராயணசாமி இவர் இறந்தது - 16.10.1910

தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகப் போராட்டத்தில் மூன்றாவதாக பலியான மூன்றாவது தியாகி - தில்லையாடி வள்ளியம்மை. இவர் இறந்தது 22.2.1914.

இதில் முதல் தியாகியான நாகப்பன் படையாட்சியையும் இரண்டாம் தியாகியான நாராயணசாமியையும் ஒதுக்கிவிட்டு -
மூன்றாவது தியாகியான தில்லையாடி வள்ளியம்மையை மட்டும்; தன் சுதந்திரதின விழா பேச்சில் - இந்திய விடுதலைப் போராட்ட தியாகிகள் பட்டியலில் சேர்த்ததற்கு என்ன காரணம்?

முதல் தியாகியான நாகப்பன் படையாட்சியின் தியாகம் குறைவானதா?
மகாத்மா காந்தியே அவரது தியாகம் குறித்து என்னவெல்லாம் சொல்கிறார் என்பதைப் பாருங்கள்.

"நாகப்பா தாய் நாட்டிற்காக உன் உயிரை நீ ஈந்தபோது நீ ஒரு இளைஞன் தானே? உன் குடும்பத்திற்கு அருளப்பெற்ற ஓர் ஆசீர்வாதமாகவே உன் தியாகத்தை நான் கருதுகிறேன். நீ இறந்துவிட்டாய் என்றாலும் சிரஞ்சீவியே" என்று இந்திய ஒப்பீனியன் பத்திரிகையில் காந்தியடிகள் எழுதியிருக்கிறார். (தமிழ்நாட்டில் காந்தி என்ற புத்தகம் 1969இல் வெளியிடப்பட்டது அதில் பக்கம் 39,40)

அதே புத்தகத்தில் 41ஆம் பக்கத்தில் -
பிளேம் போண்டீன் சிறையில் வள்ளியம்மாளுக்கும் நாகப்பனுக்கும் ஒரு நினைவுக்கல் 1914 ஜூலை 15ஆம் நாள் திறந்து வைக்கப்படுகிளது இந்த நினைவுக்கல்லைப் பிலிப் என்ற அம்மையார் திறந்து வைத்தபின் காந்தியடிகள் பேசியதாவது:

"வள்ளியம்மாளுடைய முகத்தைப் போன்று நாகப்பனுடைய முகம் எனக்கு அவ்வளவாக தெளிவாக நினைவில் இல்லை. ஆனால் அந்த பயங்கரமான சிறை வாழ்க்கையில் கடுமையான குளிரைத் தாங்கிக் கொண்டு அஞ்சாநெஞ்சம் படைத்த அந்த இளைஞன் எவ்வளவு இன்னல்களை அனுபவித்தான் என்பதை நான் நன்றாக அறிவேன். அவனை அங்கே அனுப்பியது எவ்வளவு அனாவசியமானது என்பதையும் நான் அறிவேன். ஆனால் அந்த சமயத்திலெல்லாம் சத்தியாகிரகிகளுக்கு என்ன நன்மை செய்யலாம் என்பதில் அல்லாமல்; அவர்களுடைய உணர்ச்சிகளை எவ்வாறு திருப்புவது என்பதில்தாம் நாம் கவனம் செலுத்தினோம்.
இன்று நாகப்பனுடைய உள்ளம் எவ்வளவு எஃகு போன்ற உறுதியுடன் இருந்தது என்பதை நாமெல்லோரும் ஒப்புக் கொள்கிறோம். உடல் நலமெல்லாம் சீர்குலைந்து போய் அவன் சிறையிலிருந்து வெளியே வந்தான். அப்போது அவன் சொன்னான். ‘இதனாலென்ன? ஒரே ஒரு முறைதான் நான் சாக முடியும். அவசியமானால் மீண்டும் நான் சிறைக்குச் செல்லத் தயாராக இருக்கிறேன்.’
கடைசியாக அவன் கூறியது சரியாகப் போயிற்று. தோல்வியை அறியாத அவன் ஆன்மா பிரிந்தது. தென்னாப்பிரிக்காவில் பிறந்த நாகப்பன் படிப்பறிவில்லாதவன். அனுபவத்தில் ஆங்கிலம்; ஜூலு ஆகிய இரண்டு மொழிகளையும் பேசக் கற்றுக்கொண்டவன். அவனிடம் எந்தவிதமான துன்பத்தையும் சகித்துக்கொள்ளும் மனத் திண்மையும்; பொறுமையும்; நாட்டுப்பற்றும் சாவுக்கு அஞ்சாத மன உறுதியும் இருந்தன. இதைவிட ஒரு மனிதனுக்கு என்னதான் வேண்டும்" என்று நாகப்பனைப் பாராட்டிப் பேசுகிறார் காந்தி.

இரண்டாவது தியாகியான நாராயணசாமியின் தியாகத்தைப் பற்றி பாராட்டி எழுதி முடிக்கும்போது இந்தியன் ஒப்பீனியன் பத்திரிகையில் காந்தியடிகள்:

‘‘நாகப்பனையும் நாராயணசாமியையும் பெற்றெடுத்த தாய்மார்களுக்கு ஜே’’! என முடிக்கிறார்.

இந்த இரண்டு மாபெரும் தியாகிகளையும் ஒதுக்கவிட்டு தில்லையாடி வள்ளியம்மையை மட்டும் விடுதலைப் போராட்டத் தியாகிப் பட்டியலில் சேர்த்ததற்கு என்ன காரணம்?

நாகப்பன் படையாட்சி என்ற பெயரை முதல்வர் ஜெயலலிதாவின் போராட்டத் தியாகிகளின் பட்டியலில் சேர்க்காததற்கு; வன்னியரில் ஒரு தியாகி இருந்தான் என்பதை இருட்டடிப்பு செய்ய வேண்டும்; வெளிச்சப்படுத்திவிடக்கூடாது என்பதைத் தவிர வேறு காரணம் இருப்பதாகத் தெரியவில்லை.

அப்படியானால் நாராயணசாமியை ஏன் சேர்க்கவில்லை? நாராயணசாமியை சேர்த்துவிட்டு ; நாகப்பன் படையாட்சியை மட்டும் சேர்க்காமல் விட்டுவிட்டால் - வன்னிய சமூகத்திற்கு எதிரான துரோகம் வெட்ட வெளிச்சமாகிவிடுமே என்ற பயம் காரணமாக இருக்கலாம்..

அல்லது-
இரண்டாவது தியாகியான நாராயணசாமியும் ஒரு வன்னியனோ என்னவோ தெரியவில்லை.

இப்படி-
வன்னிய விடுதலைப் போராட்ட தியாகிகளின் பெயரை இருட்டடிப்பு செய்வது இப்போதுதான் ஜெயலலிதா செய்கிறர் என்பதில்லை.

இதற்கு முன்-
நெடுஞ்செழியன் கல்வியமைச்சராக இருந்தபோது தில்லையாடி வள்ளியம்மைக்கு விழா எடுத்து தன் முதலியார் பாசத்தை வெளிப்படுத்திக் கொண்டார். அப்போது நெடுஞ்செழியன் செய்ததும் - வன்னிய தியாகிகளின் பெயரை இருட்டடிப்பு செய்த துரோகமே.
நெடுஞ்செழியனுக்கு முன்பே காமராச நாடார் வன்னிய தியாகிகளின் பெயர்களை எப்படியயல்லாம் இருட்டடிப்பு மற்றும் துரோகங்களைச் செய்தார் என்பது குறித்து 1.9.1949 நாளிட்ட பல்லவநாடு இதழில் வன்னியகுல மித்திரன் இதழ் ஆசிரியரான பெரம்பூர் திரு.ஆ.சுப்பிரமணிய நாயகர் வன்னிய மக்களுக்கு காங்கிரஸ் செய்த துரோகம் என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் தெளிவாக்கியுள்ளார்..
வன்னிய துரோகம் காமராசரால் ஆரம்பிக்கப் பட்டது. என்பதற்கு 1949இல் வெளியான மேற்கண்ட கட்டுரையும்; அது இன்றுவரை தொடர்கிறது என்பதற்கு - முதல்வர் ஜெயலலிதாவின் சதந்திர தின உரையில் இந்திய விடுதலைப் போராளிகளின் பெயர்ப் பட்டியலில் - தில்லையாடி வள்ளியம்மைப் பெயரை மட்டுமே குறிப்பிட்டுவிட்டு; முதல் தியாகியான நாகப்பப் படையாட்சியைஇருட்டடிப்பு செய்த துரோகமும் - உதாரணங்களாகும்.

ஜெயலலிதாவின் இந்திய வடுதலைப் போராட்டத் தியாகிகள் பட்டியலில் முக்குலத்தோர் வாடை அதிகமாக வீசுவதற்கும் வன்னிய விடுதலைப் போராட்டத் தியாகிகளின் பெயர்கள் முழுçமாக இருட்டடிப்பு செய்ததற்கும்; முதல்வரின் பேச்சைத் தயாரித்தவர் ஒரு முக்குலத்தோர் என்பதுதான் காரணமா?

பேச்சுத் தயாரிப்பவர்களை எல்லாம் அவர்களது விருப்பு வெறுப்புக்கு ஏற்ப பட்டியல் தயாரிக்க அனுமதிப்பது முதலமைச்சருக்கு அவப்பெயரைத் தேடித் தந்துவிடும் எனத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் இத்தகைய இருட்டடிப்புகளும் ஒரு வகை வன்முறையே என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒரு சமூகத்தின் தியாகங்களை இருட்டடிப்பு செய்வதும். உண்மை வரலாற்றை மறைத்து ஒடுக்க முயல்வதும்தான் வன்முறைகளிலேயே கொடிய வன்முறை என்பதை காமராஜர் முதல் ஜெயலலிதா வரையிலான தமிழக முதல்வர்கள் இனியேனும் உணர வேண்டும்.
அல்லது தங்கள் மீது ஏவப்படும் இந்த கொடிய வன்முறையை அவர்களுக்கு புரியும் வகையில் வன்னியர் சமூகம் உணர்த்த வேண்டும்.

(அச்சமில்லை அக்டோபர் 2012 இதழில்)