Monday, February 6, 2017

தமிழர் நீதிக்கட்சி சுபா இளவரசன்

தமிழர் நீதிக்கட்சி தலைவர் சுபா இளவரசன்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம்  வல்லம்  கிராமத்தை  சேர்ந்தவர் சுபா இளவரசன்.  இவர்  வன்னியர்  சமூகத்தை  சேர்ந்தவர் .தமிழ்நாடு விடுதலைப்படை எனப்படும்  அமைப்பின் தலைவராக விளங்கிய சுபா இளவரசன், கடந்த கால அ.தி.மு.க., அரசின் அதிரடி நடவடிக்கை காரணமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சில ஆண்டு சிறைவாசத்துக்கு பிறகு விடுதலையாகி வெளியே வந்த சுபா இளவரசன், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழர் நீதிக்கட்சி எனப்படும் புதிய அரசியல் கட்சியை துவக்கி செயல்பட்டு வருகிறார் .

Saturday, February 4, 2017

தமிழ் தேசிய தலைவர் பொன்பரப்பி தமிழரசன்

தமிழ் தேசிய தலைவர் பொன்பரப்பி தமிழரசன்

அண்ணன்  தமிழரசன் – அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி அஞ்சல் வாழ்ந்தவர் சொந்த ஊர் கடலூர் மாவட்டம்  மதகளிர் மாணிக்கம் எனும் கிராமத்தில் துரைசாமி – பதூசி அம்மாள் ஆகியோருக்கு மகனாக 1945 ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்கு ஒரு தங்கை உண்டு. கோவையில் B.E. ( Chemical Engr) வேதியியல் பொறியியல் படித்தார்.

இளம் வயதிலேயே பொதுவுடைமைக் கருத்தில் நாட்டம் கொண்ட இவர் 1969 –ல் இந்திய கம்ஸயூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் (ML)-ன் மாபெரும் போராளி சாரும் மஜும்தாரின் அறைகூவலான ’’ மக்கள் விடுதலை” எனும் முழக்கத்தினை ஏற்று மாணவராக இருந்தபோதே அவ்வியக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

தமிழ்நாட்டில் மா.இலெ. இயக்கங்களில், மொழி நாட்டினச் சிக்கலில் புதிய பார்வையை தோழர் தமிழரசன் உருவாக்கினார். அவர் பஞ்சாப், மணிப்பூர், நாகாலாந்து, காசுமீர் போன்ற மொழி நாட்டினங்களின் கருவிப் போராட்டங்களையும் மற்றும் தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டார்.

தமிழீழம், பஞ்சாப், காசுமீர், நாகாலாந்து, மணிப்பூர் போன்ற மொழி நாட்டினங்களுக்கும், இந்திய அரசுக்கும் இடையே தொடர்ச்சியாகக் கருவிப் போராட்டம் நடந்து வருகின்றது. அதனால் மொழி, நாடு விடுதலைப் போராட்டங்கள் நடக்கும் இடங்களில் மொழி நாட்டினத்திற்கும், இந்திய ஆளும் வகுப்புக்கும் இடையிலான முரண்பாடு முதன்மையானதாக உள்ளது.
ஆகையால் மா.இலெ. இயக்கங்கள் ஏகாதிபத்தியத்திற்கும் இந்திய மக்களுக்கும் இடையிலான முரண்பாடு, நிலக்கிழமைக்கும் பரந்து பட்ட மக்களுக்கும் இடையிலான முரண்பாடு, இந்த இரண்டு முரண்பாடுகளையும் இந்தியப் புரட்சிக்கு அடிப்படை முரண்பாடுகளாக வகுத்துள்ளன.

இவ்வடிப்படை முரண்பாடுகளில் இந்தியாவில் உள்ள மொழி நாட்டினங்களுக்கும் இந்திய ஆளும் வகுப்புகளுக்கும் இடையிலான முரண்பாட்டை மூன்றாவது முரண்பாடாக சேர்க்க வேண்டும் என்று தோழர் தமிழரசன் போராடினார்.

அதே நேரத்தில் இந்திய குமுக (சமூக) அமைப்பு அரை அடிமை, அரை நிலக்கிழமையும் என்பதிலோ, நிலக்கிழமைக்கும் பரந்துபட்ட மக்களுக்கும் இடையிலான முரண்பாடு முதன்மையான முரண்பாடு என்பதிலோ, இந்திய கட்சி என்பதிலோ அவரிடம் எந்த மாற்றமும் இல்லை.

இந்தியாவில் உள்ள அடிப்படை முரண்பாடுகளில் மொழி நாட்டின முரண்பாட்டை மூன்றாவதாகச் சேர்க்க வேண்டும் என்பதோடு அவரின் மார்க்சிய கடமை முடிந்தது.

அதன்பின், இந்தியாவில் முதன்மை முரண்பாடு எது? இந்தியக் குமுக அமைப்பு என்ன? இந்தியக் கட்சியா அல்லது மொழி நாட்டினக் கட்சியா என்பதில் எந்தவித முடிவுக்கும் வராமல் தடுமாறினார். தோழர்கள் புலவர் கலியபெருமாள், பொன்பரப்பி இராசேந்திரன், புதுவை தமிழ்ச்செல்வன் இவர்கள்தாம் தமிழ்நாடு கட்சி, இந்திய ஆளும் வகுப்புக்கும் தமிழினத்திற்கும் இடையிலான முரண்பாடே முதன்மை முரண்பாடு என்ற முடிவிற்கு வந்தனர்.

இன்றைக்கு தமிழ்நாட்டு விடுதலை இயக்கம் இருக்கிறது என்றால் அதற்கு தோழர் புலவர் கலியபெருமாளே முதன்மையானவர். ஆனால் அடிப்படையில் மொழி நாட்டினச் சிக்கலைப் பற்றி சிந்திக்கக் காரணமாக இருந்தவர் தோழர் தமிழரசனே.

ஒரு கட்டத்தில் தோழர்கள் புலவர் கலியபெருமாளும் புதுவை தமிழ்ச்செல்வனும் அமைப்பிலிருந்து விலகிக் கொண்டனர். தோழர்கள் பொன்பரப்பி இராசேந்திரனும் ஆதமங்கலம் தருமலிங்கமும் அமைப்பில் தொடர்ந்து போராடி, தோழர் தமிழரசனை தமிழ்நாடு விடுதலையை ஏற்க வைத்தனர்.

1986இன் முடிவில் கொல்லிமலையில் நடந்த அமைப்பு மாநாட்டில், தமிழ்நாடு கட்சி அமைப்பு, இந்திய ஆளும் வகுப்புக்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான முரண்பாடே முதன்மை முரண்பாடு என்ற அடிப்படையில் தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சி (மா.இலெ.)இன் அறிக்கையை தோழர் தமிழரசன் உருவாக்கினார்.

நக்சலைட் இயக்கத்தின் திருப்பு முனையாக இத் தருணத்தில் தோழர் தமிழரசன் உருவாகினார். 1980களில் இந்த இயக்கம் மிக வேகமாக வளர முக்கிய காரணம் தோழர் தமிழரசன் தான். People war Group இயக்கத்தின் பொலிட்பீரோ உறுப்பினராகவும் அவர் உயர்ந்தார். சாதியில்லா சமுதாயம் அமைப்பது, பண்னை நிலங்களை ஏழை மக்களுக்கு கொடுப்பது போன்றவை இவரின் முக்கிய கொள்கைகளாக இருந்தன. அதே சமயத்தில் தமிழ் தேசியம், தனித் தமிழ்நாடு போன்ற கோரிக்கைகளில் நம்பிக்கை உடையவராக தமிழரசன் விளங்கினார்.

1985ம் ஆண்டு தமிழ் ஈழத்திற்கு ஆதராக தமிழகத்தில் உணர்வு அலைகள் கரைபுரண்ட பொழுது, தோழர் தமிழரசன், புலவர் கலியபெருமாள் போன்றோர் தங்களை தமிழ்தேசிய உணர்வுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டனர். இதனால் மக்கள் யுத்தக் குழுவில் இருந்து தோழர் தமிழரசன், புலவர் கலியபெருமாள் இருவரும் நீக்கப்பட்டனர். இதன் பிறகு தமிழ்நாடு மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட் கட்சியை இருவரும் துவங்கினர். இக் கட்சியின் ஆயுதப் பிரிவாக “தமிழ்நாடு விடுதலைப் படை (TNLA)” என்ற அமைப்பை தோழர் தமிழரசன் தோற்றுவித்தார்.

பொறியியல் பயின்ற தோழர் தமிழரசன் குண்டுகள் தயாரிப்பதிலும் வல்லவராக இருந்தார். 1985ம் ஆண்டு துவங்கி 2000வரை கணக்கெடுத்தால் தமிழத்தின் பல இடங்களில் சுமார் 80க்கும் மேற்பட்ட குண்டுவெடிப்புகளை இந்த இயக்கம் நடத்தியது. மைய அரசின் தளங்களை தான் இந்த அமைப்பு குறிவைத்து தாக்கியது. தனித்தமிழ்நாட்டை உருவாக்கி அங்கு சாதிபேதமில்லா சமதர்ம சமுதாயத்தை அமைப்பது தான் தன்னுடைய லட்சியம் என்று தமிழரசன் முழங்குவார். பண்ணைக்காரர்களிடம் இருந்து கைப்பற்றிய பணத்தையும், பொருளையும் ஏழைகளுக்கு அளிப்பார். மக்களை தமிழரசன் மிகவும் நேசித்தார். மக்களுக்காக வாழ்வது தான் அவரது லட்சியமாக இருந்தது.

1987ம் ஆண்டு, செப்டம்பர் 1ம் நாள் பொன்பரப்பி கிராமத்தில், தன் இயக்கத்திற்கு பொருள் சேர்ப்பதற்காக தமிழரசன் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டார். பொன்பரப்பியில் இருந்த ஸ்டேட் பாங்க் வங்கியை கொள்ளை அடித்து விட்டு வெளியேறும் பொழுது அவரை அடையாளம் தெரியாமல், அவர் “தோழர் தமிழரசன்” தான் என்று தெரியாமல் ஊர் மக்கள் தாக்கினர். அப்பொழுது அவரிடம் குண்டுகளுடன் துப்பாக்கி இருந்தது. அந்த துப்பாக்கியை பொதுமக்கள் மீது சுட்டிருந்தால், மக்கள் ஓட்டம்பிடித்திருப்பர். குறைந்தபட்சம் அந்த துப்பாக்கியை பொதுமக்கள் மீது சுடப்போவதாக நீட்டியிருந்தால் கூட மக்கள் நெருங்கியிருக்க மாட்டார்கள். ஆனால் தன் மக்களை மிகவும் நேசித்த தோழர் அவர்களை சுடப்போவதாக கூட சொல்ல வில்லை. எந்த மக்களுக்காக போராடினாரோ, அதே மக்களின் கையில் அடிபட்டு இறந்தார். இதை விட ஒரு சோகமான விடயம் பொன்பரப்பி தமிழரசனின் சொந்த கிராமம். தன்னை வெளிப்படுத்தினால் எங்கே தன்னை ஒரு கொள்ளையனாக தன் ஊர் மக்கள் நினைத்து விடுவார்களோ என்று எண்ணி தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமலே தோழர் மறைந்து போனார்.

கொல்லப்பட்டது தமிழரசன் தான் என்று பிறகு கேள்விபட்டவுடன் பொன்பரப்பிலும், பிற கிராமங்களிலும் நிலவிய சோகம் இன்றும் என் நினைவில் நிற்கிறது. இப்பகுதி மக்கள் தமிழரசனை நேசித்தனர். அவரது முகம் கூட தெரியாமல் அவரது சேவைகள் மட்டுமே பலர் நினைவில் இருந்தது. இன்றும் நிற்கிறது.

தோழர் தமிழரசனின் ஆயுதப் போராட்டம் இன்றைய காலக்கட்டத்தில் அர்த்தமற்றவையாக தெரியலாம். ஆனால் 1980களில் இப் பகுதியில் நிலவிய வறுமை, அறியாமை போன்றவையுடன் பொருத்தி பார்த்தால் அவருடைய போராட்டத்தின் பொருள் விளங்கும்.

தமிழகத்தின் அத்தனை ஊடகங்களும் இந்த நிகழ்ச்சி குறித்து பொய்க்கதைகளை தான் அவிழ்த்து விட்டனவே தவிர ஒரு பத்திரிக்கை கூட உண்மை நிலையை எழுதவில்லை.

தமிழக வரலாற்றில் மக்களை நேசித்த மாமனிதர்கள் பட்டியலில் தமிழரசனின் பெயர் முக்கியமானது. 
வீரவணக்க நாள் (01.09.1987) 

சுண்ணாம்புக்குழி தியாகராஜன்

கங்கைகொண்ட சோழபுரம் திருக்கோயில் அருகே அமரர் சுண்ணாம்புக்குழி தியாகராஜன் திரு உருவ சிலை அமைந்துள்ளது,

சுண்ணாம்புக்குழி தியாகராஜன் இவர் எவருக்கும் அஞ்சாதவர் ,பெரும்  செல்வாக்குடன் வாழந்தவர்S.S.ராமசாமி படையாச்சியார் உடன் கருத்து வேறு கொண்டு  உழைப்பாளர் முன்னேற்ற கட்சி என்ற  தனி கட்சி தொடங்கினர் .பல அரசு அதிகாரிகள்  மற்றும் இவர் சொன்ன சொல்லுக்கு கட்டுப்பட்டு நடப்பாறுகள், இவரின் தயவால் பல சமூக மக்கள் பல வழக்குகளில் காப்பாற்றப்பட்டனர்.


கங்கொண்டசோழபுரம்,ஒரு காலத்தில் இக்கோயிலின் கற்களை அருகில் உள்ள கிராம மக்கள் எடுத்து சென்று வீடு கட்டினர், இக்கோயிலை பற்றி அரசு கண்டு கொண்டதில்லை,ஆனால் தலைவர் சுண்ணாம்புகுழி தியாகராஜன், பொது மக்கள் கற்களை கொண்டு செல்லவதை தடுத்து நிறுத்தினார்,அது மட்டுமில்லாமல் எம்ஜிஆர் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த காரணத்தால் அமைச்சர்களிடம் பாழ் அடைந்த கோயிலிலை பாதுகாக்க,சிறப்பிக்க பல பணிகளை செய்து தர சொன்னார். 




Add caption


எம்ஜிஆர் உடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர், 
எம்ஜிஆர் அவர்களை ஜெயங்கொண்டம் பகுதிக்கு அழைத்து வந்து மாபெரும் மாநாட்டை நடத்திக்காட்டினர்,
1971ஆம் ஆண்டு ஆண்டிமடம் சட்டமன்ற தொகுதியில் திமுக எசு. சதாசிவ படையாச்சி அவர்களை எதிர்த்து போட்டியிட்டு யார் எதிர் பாரவிதமாய் தோல்வி அடைந்தார்.

இவர் மீது கானூர் சாமிக்கண்ணு படையாச்சி மிகுந்த மரியாதையை வைத்து இருந்தார்


அமரர் கோ .
 தியாகராசன் 
அவர்கள் 

திரு உருவ சிலைத்திறப்பு விழா 
முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் ,
பொது செயலாளர் உழைப்பாளர் முன்னேற்ற கட்சி ,
இடம் :கங்கைகொண்ட சோழபுரம்,
தலைமை :N .மாசிலாமணி. MBBS .Ex MLA ,
                   R .மார்க்கபந்து  .BA .Ex  MLA ,

சிலை திறப்பாளர் :மாண்புமிகு பண்ருட்டி S .ராமச்சந்திரன், BE ,
                                      முன்னாள் அமைச்சர்,

முன்னிலை :திரு .S.S.ராமசாமி படையாச்சியார் .MP ,
                       திரு. K .S .கணேசன். MLA ,
                       திரு. S .சிவசுப்ரமணியன்.MA ,BL ,MLA ,   
  
நன்றியுரை :     தியாக .மோகன் 
                          ஊராட்சி மன்ற தலைவர் 

கானூர் சாமிக்கண்ணு படையாட்சி


தலைவர் கானூர் சாமிக்கண்ணு படையாட்சி

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குவதற்காக போராடிய தலைவர்கள் மத்தியில் தனது பதவி அதிகாரத்தைப் பயன்படுத்தி இட ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்திக்காட்டியவர் கானூர் சாமிக்கண்ணு படையாட்சி. 1891 ஆம் ஆண்டு சின்னத்தம்பி-சிவகாமி இணையருக்கு மகனாகப் பிறந்தவர்.இவரின் சொந்த ஊர் உடையார்பாளையம் அருகிலுள்ள வாரியங்காவல் ஆகும். இவரது தந்தை காலத்தில் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்புக்கு அருகிலுள்ள கானூர் கிராமத்திற்கு இடம் பெயர்ந்தனர்.சாமிக்கண்ணு தேவங்குடியிலுள்ள தன் தாய் மாமன் வீட்டில் தங்கி விளாகம் பள்ளியில் தொடக்கக்கல்வி பயின்றார்.அப்போது அங்கு காலரா நோய் பரவியதனால் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு கானூருக்கு வந்துவிட்டார்.அதன் பிறகு அவர் படிக்கவே இல்லை.மூன்றாம் வகுப்போடு அவர் கல்வி முடிந்து போனது. கானூரில் மணியக்காரராகப் பொது வாழ்வைத் தொடங்கிய சாமிக்கண்ணு 1946 இல் சிதம்பரம் தாலுக்கா போர்டு தலைவரானார். 1952 இல் சென்னை சட்டமன்றத் தேர்தலில் உழைப்பாளர் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். 1953 இல் விருத்தாசலம் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதே கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினரான பிறகு அவரது புகழ் பரவத்தொடங்கியது. 1955 இல் தென்னார்க்காடு மாவட்ட நாட்டாண்மைக்கழகத் தலைவராகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப் பெற்றார். அவரது பதவிக்காலத்தில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட இளைஞர்கள் பலருக்கு வேலைவாய்யபை வழங்கினார். இவரது பதவிக்காலத்தில் ஒரு முறை ஆசிரியர் பணிக்கு நேர்காணல் நடத்தவேண்டிய சூழல்.மாவட்டத் தலைநகருக்கு நேர்காணலுக்கு வந்தவர்களை கானூருக்கு வரும்படி கூறிச் சென்றுவிட்டார். பணிநாடுநர்களும் அங்கு சென்றுள்ளனர். களத்துமேட்டிற்கு அழைத்துச் சென்று வயலில் இறங்கி நாற்றரிக்கச் சொன்னாராம். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இளைஞர்கள் வயலில் இறங்கி நாற்று அரிக்கத் தொடங்கவிட்டனர் உயர்சாதி இளைஞர்கள் வரப்பிலேயே நின்றுகொண்டிருந்தனராம்.அவர்களைப் பார்த்து சாமிக்கண்ணு கூறினாராம்," இவ்வளவு நாளா நீங்க நாற்காலியில உக்காந்திருந்தீங்க இவனுவோ நாத்தரிச்சிகிட்டு கெடந்தானுவோ, இவன்லாம் இப்படியே கெடக்க வேண்டியதுதானா? இவனும் கொஞ்சம் நாளைக்கு நாற்காலியில உக்காந்து பார்க்கட்டும் நீங்க வீட்டுக்கு போங்க" என்று அனுப்பி வைத்தாராம். இவரது பதவிக்காலத்தில்தான் இம்மாவட்டத்தில் பல பள்ளிகள் திறக்கப்பட்டன. கிராமங்களில் தொடங்கப்பள்ளி, நகரங்களில் உயர்நிலைப்பள்ளி என்பது இவரது இலக்காக இருந்தது. பழமையான பல பள்ளிக் கட்டடங்களின் கல்வெட்டுகளில் இவர் பெயர் இடம்பெற்றிருப்பதை இன்றும் காணலாம். சாலை வசதிகள், குடிநீர் வசதி, மருத்துவ வசதி என ஏழை எளிய மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்தார். இவர் பதவிக்காலத்தில்தான் விருத்தாசலத்திலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் வெள்ளாற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்டப்பட்டது. அப்பாலம் இன்றுவரை மக்களுக்கு பயன்பட்டது. தற்போதுதான் அது மேம்பாலமாக மாற்றப்பட்டு வருகிறது. 1957 இல் திருமுட்டம் பேரூராட்சித் தலைவராக மூன்றரை ஆண்டுகள் பதவி வகித்தார்.உடையார்பாளையம் ஜமீன்தார் காலத்திற்குப் பிறகு ஓடாத திருமுட்டம் கோயில் தேரை இவரது பதவிக்காலத்தில்தான் ஓட வைத்தார். 1962 இல் செயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். 1967 இல் கானூர் ஊராட்சிமன்றத் தலைவராகப் பதவி வகித்தார். வாழ்நாள் முழுதும் மக்களுக்கு தொண்டு செய்தாலும் விவசாயப் பணியைக் கைவிட்டதில்லை. அரசியலில் ஈடுபடுபவர்கள் சொந்தமாக ஏதேனும் தொழில் செய்தால்தான் பொதுவாழ்வில் தூய்மையைக் கடைபிடிக்க முடியும் என்பது அவரின் கொள்கை. அதிகாரிகளுக்கு அஞ்சாமல் ஒன்றுக்கும் உதவாத விதிமுறைகளை மீறி ஏழை எளிய மக்களுக்கு உதவுவதில் அவருக்கு நிகர் அவரே. படித்த பலரைத் தேடி வேலைவாய்ப்பை வழங்கி விட்டு பின்னர் நியமன ஆணையை அனுப்பி வைப்பாராம். இத்தகைய பல சிறப்புகளைப் பெற்ற மக்கள் தலைவர் சாமிக்கண்ணு 1984 இல் இயர்கை எய்தினார். கடலூர் மாவட்டத்தில் இன்று ஓய்வூதியம் பெறும் பல ஆசிரியர்கள் கானூர் சாமிக்கண்ணு படையாட்சியால் பணியமர்த்தப் பட்டவர்கள் என்பதை அவர்களே கூறக் கேட்டிருக்கிறேன். இது போன்ற தலைவர்கள் நமக்கு இப்போது கிடைப்பார்களா என்ற ஏக்கம் மனதுக்குள் எழுகிறது.


நன்றி: சாவடிகுப்பம் திரு. ந.இராமலிங்கம்.எம்.ஏ.எட்.,

ஜெயங்கொண்டம் அழகர் கோயில்

சலுப்பை  அழகர் கோயில்  வான்நின்று  வாழ்த்தும் 
எங்கள் இதய தெய்வம் தெய்வத்திரு படையாட்சி  .சீனுவாச தேவர் அவர்களின் முன் முயற்சியாலும் நல்லாசியாலும் நடைபெறும் மாக கும்பாபிஷேக பெருவிழா 1-06-2014 ஞாயிறு

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரம்  அருகே சலுப்பை கிராமத்தில் இக்கோயில் அமைந்துள்ளது

மீன்சுருட்டியில் இருந்து 4.50கிலோமீட்டர் தூரம்
கங்கைகொண்டசோழபுரம் இருந்து 5.80கிலோமீட்டர் தூரம்

ஜெயங்கொண்டம் to சலுப்பை  அழகர் கோயில் 12 கிலோமீட்டர் தூரம்




உடையார் பாளையம் வேலாயுதம்

ஜெயங்கொண்டம்  கரடிக்குளம் கிராமத்தை  சேர்ந்தவர் வேலாயுதம்

உடையார்பாளையத்தில் பகுத்தறிவுக்காகவும், மக்களின் எழுச்சிக்காகவும் பாடுபட்ட ஆசிரியர் வேலாயுதம் (01-07-1910 --- 13-11-1947) சுதந்திரம் அடைந்த மூன்றே மாதத்தில் கழுத்து நெறித்துக் கெலை செய்யப்பட்டு, பலா மரத்தில் நிர்வாணமாகத் தெங்கவிட்ட கெடுமையை சாதி வெறியர்கள் இந்தப் புரட்சி வீரருக்குச் செய்துள்ளார்கள்.

அறிவுக் கண்ணைத் திறந்து, பகுத்தறிவு விதையை விதைத்து, சாதி இழுக்கைக் களைவதற்காகப் பாடுபட்டு இயங்கி வந்தர் உடையார் பாளையம் ஆசிரியர் வேலாயுதம் ஆவார்.

இறந்தவருக்காகப் பலரும் வருந்தியிருக்கிறார்கள். ஆனால் கெலை செய்தவர்கள் மிகச் சாதாரணமாக வெளிவந்து விட்டார்கள். பேச்சாற்றலும் செயல் திறனும் உடைய இவர் தன் வீட்டில் தமிழ் வாழ்க தமிழர் வாழ்க என எழுதியதேடு மட்டுமல்லாமல் தன் பள்ளிக்குத் தமிழ்த் தகைமைகளை அழைத்துப் பேசவும் வைத்துள்ளார்.



1947 நவம்பரில் ஒரு திடுக்கிடும் சம்பவம் நடைபெற்றது. உடையார் பாளையம் வேலாயுதம் என்னும் பள்ளி ஆசிரியர் கழகப் பிரசாரம் செய்தார் என்று , அவரை அடித்துக் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டனர். இந்த அக்கிரமத்தைக் கண்டித்து சென்னை மயிலையில் ஈ.வெ.கி. சம்பத் தலைமையில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது. அண்ணா கலந்து கொண்டார்.


நாடாளுமன்ற தொகுதிகள்

திருப்பத்தூர் 71-2009
 இங்கு வென்றவர்கள்

  1. 1971 - சி.கே. சின்னராசி கவுண்டர் - திமுக
  2. 1977 - சி.என். விச்வநாதன் - திமுக
  3. 1980 - எசு. முருகையன் - திமுக
  4. 1984 - ஏ. செயமோகன் - காங்கிரசு
  5. 1989 - ஏ. செயமோகன் - காங்கிரசு
  6. 1991 - ஏ. செயமோகன் - காங்கிரசு
  7. 1996 - டி. வேணுகோபால் - திமுக வன்னியர் 
  8. 1998 - டி. வேணுகோபால் - திமுக வன்னியர் 
  9. 1999 - டி. வேணுகோபால் - திமுக வன்னியர் 
  10. 2004 - டி. வேணுகோபால் - திமுக வன்னியர் 
  11. 2009   டி. வேணுகோபால் - திமுக - வன்னியர் 
சிறீபெரும்புதூர் 71-2014                               
இங்கு வென்றவர்கள்
  1. 1967-71 - (தனி)சிவசங்கரன் (திமுக) ஆதிதிராவிடர்
  2. 1971-77 - (தனி)டி.எஸ். லட்சுமணன் (திமுக) 
  3. 1977-80 - (தனி)சீராளன் ஜெகன்னாதன் (அதிமுக) 
  4. 1980-84 - (தனி)நாகரத்தினம் (திமுக) 
  5. 1984-89 - (தனி) மரகதம் சந்திரசேகர் (காங்கிரசு) 
  6. 1989-91 - (தனி)மரகதம் சந்திரசேகர் (காங்கிரசு) 
  7. 1991-96 - (தனி)மரகதம் சந்திரசேகர் (காங்கிரசு) 
  8. 1996-98 - (தனி)நாகரத்தினம் (திமுக) ஆதிதிராவிடர்
  9. 1998-99 - (தனி)டாக்டர் வேணுகோபால் (அதிமுக) ஆதிதிராவிடர்
  10. 1999-04 - (தனி)ஏ.கிருஷ்ணசாமி (திமுக) ஆதிதிராவிடர்
  11. 2004-09 - (தனி)ஏ.கிருஷ்ணசாமி (திமுக) ஆதிதிராவிடர்
  12. 2009- த. ரா. பாலு (திமுக) முக்குலத்தோர்
  13. 2014-ராமச்சந்திரன்    அதிமுக


  1. 1951 - ராமச்சந்தர் - சிடபிள்யூஎல்,1951 - முத்துக்கிருஷ்ணன் - காங்கிரசு.
  2. 1957 - முத்துக்கிருஷ்ணன் - காங்கிரசு.
  3. 1957 - என்.ஆர்.முனியசாமி - காங்கிரசு.
  4. 1962 - அப்துல் வாகித் - காங்கிரசு.
  5. 1967 - குசேலர் - திமுக.
  6. 1971 - உலகநம்பி - திமுக.
  7. 1977 - தண்டாயுதபாணி - என்.சி.ஓ.
  8. 1980 - ஏ.கே.ஏ. அப்துல் சமது - சுயேச்சை.
  9. 1984 - ஏ.சி.சண்முகம் - அதிமுக முதலியார் 
  10. 1989 - ஏ.கே.ஏ. அப்துல் சமது - காங்கிரசு.
  11. 1991 - அக்பர் பாசா - காங்கிரசு.
  12. 1996 - பி.சண்முகம் - திமுக
  13. 1998 - என்.டி.சண்முகம் - பாமக.வன்னியர் 
  14. 1999 - என்.டி.சண்முகம் - பாமக.வன்னியர் 
  15. 2004 - காதர் மொகைதீன் - திமுக.
  16. 2009 - அப்துல் ரகுமான் - திமுக
  17. 2014-செங்குட்டுவன்-அதிமுக

வந்தவாசி 62-2004

ங்கு வென்றவர்கள்


  1. 1967: விச்வநாதன் - திமுக
  2. 1971: விச்வநாதன் - திமுக
  3. 1977: வேணுகோபால் கவுண்டர் - அதிமுக வன்னியர் 
  4. 1980: பட்டுசாமி - காங்கிரசு 
  5. 1984: பலராமன்  - காங்கிரசு வன்னியர் 
  6. 1989: பலராமன்  - காங்கிரசு வன்னியர் 
  7. 1991: கிருட்டிணசாமி -  காங்கிரசு வன்னியர் 
  8. 1996: பலராமன் - தமாகா வன்னியர் 
  9. 1998: துரை - பாமக வன்னியர் 
  10. 1999: துரை - பாமக வன்னியர் 
  11. 2004: செஞ்சி இராமச்சந்திரன் - மதிமுக வன்னியர்

                        திண்டிவனம் 51-2004
                        ங்கு வென்றவர்கள்
                        1. 1951 - ஏ. செயராமன் - TNT
                        2. 1951 - வி. முனிசாமி. - TNT வன்னியர் 
                        3. 1957 - சண்முகம் - சுயேச்சை
                        4. 1962 - ஆர். வெங்கடசுப்ப ரெட்டியார் - காங்கிரசு ரெட்டியார் 
                        5. 1967 - டிடிஆர், நாயுடு - திமுக நாயுடு 
                        6. 1971 - எம். ஆர். இலட்சுமிநாராயணன் - காங்கிரசு
                        7. 1977 - எம். ஆர். இலட்சுமிநாராயணன் - காங்கிரசு
                        8. 1980 - எசு. எசு. இராமசாமி படையாச்சி - காங்கிரசு வன்னியர் 
                        9. 1984 - எசு. எசு. இராமசாமி படையாச்சி - காங்கிரசு வன்னியர் 
                        10. 1989 - ஆர். இராமதாசு - காங்கிரசு வன்னியர் 
                        11. 1991 - கே. இராமமூர்த்தி - காங்கிரசு வன்னியர் 
                        12. 1996 - ஜி. வெங்கட்ராமன் - திமுக வன்னியர் 
                        13. 1998 - என். செஞ்சி இராமச்சந்திரன் - மதிமுக வன்னியர் 
                        14. 1999 - என். செஞ்சி இராமச்சந்திரன் - மதிமுக வன்னியர் 
                        15. 2004 - கே. தனராசு - பாமக வன்னியர் 
                            தஞ்சாவூர் 51-2014
                        பெரம்பலூர் 51-2014

                        1. 1951 -(தனி) பூரரங்கசாமி படையாச்சி - டிஎன்டி
                        2. 1957 - (தனி)பழனியாண்டி -காங் ஆதிதிராவிடர்
                        3. 1962 - (தனி)இரா.செழியன் - திமுக ஆதிதிராவிடர்
                        4. 1967 - (தனி)துரையரசு - திமுக 
                        5. 1971 - (தனி)துரையரசு - திமுக 
                        6. 1977 - (தனி)அசோக்ராஜ் - அதிமுக 
                        7. 1980 - (தனி)கே.பி.எஸ். மணி- காங் 
                        8. 1984 - (தனி)எஸ். தங்கராசு - அதிமுக 
                        9. 1989 - (தனி)அசோக்ராஜ் - அதிமுக 
                        10. 1991 - (தனி)அசோக்ராஜ் - அதிமுக
                        11. 1996 -(தனி) ஆ. ராசா- திமுக 
                        12. 1998 - கபி. ராஜரத்தினம் - அதிமுக 
                        13. 1999 - (தனி)ஆ. ராசா - திமுக 
                        14. 2004 - (தனி)ஆ. ராசா - திமுக 
                        15. 2009 - நெப்போலியன் - திமுக ரெட்டியார் சமுகம் 
                        16. 2014-மருதராஜன்-அதிமுக

                        நாகப்பட்டினம் 57-2014

                        இதுவரை காங்கிரஸ் 4 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் 5 முறையும், திமுக 4 முறையும், அதிமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. 

                        1. 1957 - அய்யாகண்ணு ஆதிதிராவிடர் மற்றும் சம்பந்தம் - காங்கிரசு 
                        2. 1962 - கோபால்சாமி - காங்கிரசு ஆதிதிராவிடர்
                        3. 1967 - சாம்பசிவம் - காங்கிரசு ஆதிதிராவிடர்
                        4. 1971 - காத்தமுத்து - சிபிஐ ஆதிதிராவிடர்
                        5. 1977 - எசு.ஜி. முருகையன் - சிபிஐ ஆதிதிராவிடர்
                        6. 1980 - தாழை.மு. கருணாநிதி - திமுக ஆதிதிராவிடர்
                        7. 1984 - மகாலிங்கம் - அதிமுக ஆதிதிராவிடர்
                        8. 1989 - செல்வராசு - சிபிஐ ஆதிதிராவிடர்
                        9. 1991 - பத்மா - காங்கிரசு ஆதிதிராவிடர்
                        10. 1996 - செல்வராசு - சிபிஐ ஆதிதிராவிடர்
                        11. 1998 - செல்வராசு - சிபிஐ ஆதிதிராவிடர்
                        12. 1999 - ஏ.கே.எசு. விஜயன் - திமுக ஆதிதிராவிடர்
                        13. 2004 - ஏ.கே.எசு. விஜயன் - திமுக ஆதிதிராவிடர்
                        14. 2009 - ஏ.கே.எசு. விஜயன் - திமுக ஆதிதிராவிடர் 
                        15. 2014-கோபால்-அதிமுக

                        மயிலாடுதுறை 51-2014


                        இங்கு காங்கிரஸ் 11 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளது. இதுவரை இந்த தொகுதியில் மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்களின் பட்டியல்.


                        1. 1951 (தனி)இரட்டைஉறுப்பினர் ஆனந்தநம்பியார் கம்யூனிஸ்ட், சந்தானம் காங்கிரசு
                        2. 1962 (தனி) மரகதம் சந்திரசேகர்- காங்கிரசு ஆதிதிராவிடர்
                        3. 1967 (தனி) சுப்ரவேலு தி.மு.க ஆதிதிராவிடர்
                        4. 1971 (தனி) சுப்ரவேலு தி.மு.க ஆதிதிராவிடர்
                        5. 1977 - (தனி)குடந்தை ராமலிங்கம் - காங்கிரசு ஆதிதிராவிடர்
                        6. 1980 - (தனி)குடந்தை ராமலிங்கம் - காங்கிரசு ஆதிதிராவிடர்
                        7. 1984 - (தனி)பக்கீர் முகம்மது - காங்கிரசு ஆதிதிராவிடர்
                        8. 1989 - பக்கீர் முகம்மது - காங்கிரசு ஆதிதிராவிடர்
                        9. 1991 - மணிசங்கர் அய்யர் - காங்கிரசு அய்யர் 
                        10. 1996 - பி.வி. இராஜேந்திரன் - தமிழ் மாநில காங்கிரசு
                        11. 1998 - கிருஷ்ணமூர்த்தி - தமிழ் மாநில காங்கிரசு
                        12. 1999 - மணிசங்கர் அய்யர் - காங்கிரசு அய்யர் 
                        13. 2004 - மணிசங்கர் அய்யர் - காங்கிரசு அய்யர் 
                        14. 2009 - ஓ. எசு. மணியன் - அதிமுக முக்குலத்தோர் 
                        15. 2014-பாரதிமோகன்-அதிமுக

                        கிருஷ்ணகிரி 51-2014

                        இங்கு வென்றவர்கள்
                        1. 1951 - சி.ஆர். நரசிம்மன் - காங்கிரசு.ஐய்யங்கார் 
                        2. 1957 - சி.ஆர்.நரசிம்மன் - காங்கிரசு.ஐய்யங்கார் 
                        3. 1962 - கே.ராஜாராம் - திமுக.
                        4. 1967 - கமலநாதன் - திமுக குருமன்ஸ்
                        5. 1971 - தீர்த்தகிரி கவுண்டர் - காங்கிரசு.
                        6. 1977 - பி.வி.பெரியசாமி - அதிமுக.
                        7. 1980 - வாழப்பாடி ராமமூர்த்தி - காங்கிரசு.வன்னியர் 
                        8. 1984 - வாழப்பாடி ராமமூர்த்தி - காங்கிரசு.வன்னியர் 
                        9. 1989 - வாழப்பாடி ராமமூர்த்தி - காங்கிரசு.வன்னியர் 
                        10. 1991 - கே.வி.தங்கபாலு - காங்கிரசு நாயுடு
                        11. 1996 - சி.நரசிம்மன் - தமாகா.
                        12. 1998 - கே.பி. முனியசாமி - அதிமுக.வன்னியர் 
                        13. 1999 - வெற்றிச்செல்வன் -திமுக.
                        14. 2004 - இ.ஜி. சுகவனம் - திமுக.24 மனை தெலுகு செட்டியார் 
                        15. 2009 - இ.ஜி. சுகவனம் - திமுக.24 மனை தெலுகு செட்டியார்
                        16.  2014-அசோக் குமார்-அதிமுக-கவுண்டர் 

                        தர்மபுரி 67-2014

                        இங்கு வென்றவர்கள்
                        1. 1967 - சி. டி .தண்டபாணி - திமுக.
                        2. 1971 - சி. டி. தண்டபாணி - திமுக.
                        3. 1977 - வாழப்பாடி ராமமூர்த்தி - காங்கிரசு.வன்னியர் 
                        4. 1980 - கே. அர்ஜூனன் - திமுக.
                        5. 1984 - தம்பித்துரை - அதிமுக கொங்கு வேளாளர் 
                        6. 1989 - எம். ஜி. சேகர் - அதிமுக.வன்னியர் 
                        7. 1991 -கே. வி .தங்கபாலு - காங்கிரசு நாயுடு 
                        8. 1996 - தீர்த்தராமன் - தமாகா.1998 - பாரி மோகன் - பாமக.வன்னியர் 
                        9. 1999 - பு. தா. இளங்கோவன் - பாமக.வன்னியர் 
                        10. 2004 - ஆர். செந்தில் - பாமக.வன்னியர் 
                        11. 2009 - ஆர். தாமரைச்செல்வன் - திமுக வன்னியர் 
                        12. 2014-அன்புமணி ராமதாஸ் -பாமக.வன்னியர் 

                        கடலூர் 51-2014


                        1951ம் முதல் 2004 வரை நடந்துள்ள 14 தேர்தல்களில் 7 முறை காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. அதிமுகவுக்கு இங்கு ஒரு முறையும், திமுகவுக்கு நான்கு முறை வெற்றி கிடைத்துள்ளது. இதுவரை இந்த தொகுதியில் மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்களின் பட்டியல்.
                        1. 1951 - ராதாகிருஷ்ணன் (காங்கிரசு)
                        2. 1957 - முத்துக்குமாரசாமி நாயுடு (சுயேச்சை) நாயுடு 
                        3. 1962 - ராமபத்ர நாயுடு (திமுக) நாயுடு
                        4. 1967 - வி.கே.கவுண்டர் (திமுக)
                        5. 1971 - ராதாகிருஷ்ணன் (காங்கிரசு)
                        6. 1977 - பூவராகன் (காங்கிரஸ்) வன்னியர் 
                        7. 1980 - முத்துக்குமரன் (காங்கிரசு)
                        8. 1984 - பி.ஆர்.எஸ். வெங்கடேசன் (காங்கிரசு) வன்னியர் 
                        9. 1989 - பி.ஆர்.எஸ். வெங்கடேசன் (காங்கிரசு) வன்னியர் 
                        10. 1991 - கலியபெருமாள் (காங்கிரசு) வன்னியர் 
                        11. 1996 - பி.ஆர்.எஸ். வெங்கடேசன் (தமாகா) வன்னியர் 
                        12. 1998 - எம்.சி. தாமோதரன் (அதிமுக) வன்னியர் 
                        13. 1999 - ஆதி சங்கர் (திமுக) முதலியார் 
                        14. 2004 - கே. வெங்கடபதி (திமுக)
                        15. 2009 - எசு. அழகிரி (காங்கிரசு)  யாதவர் 
                        16. 2014-அருண்மொழித்தேவன்-(அதிமுக) வன்னியர்

                        சிதம்பரம் 57-2014

                        சிதம்பரம் தொகுதியில் அதிகபட்சம் காங்கிரசு 6 முறையும், திமுக 4 முறையும், பாமக 3 முறையும் வென்றுள்ளன. அதிமுக ஒரே ஒரு முறை வென்றுள்ளது.இதுவரை இந்த தொகுதியில் மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்களின் பட்டியல்.
                        1. 1957 - (தனி)கனகசபை பிள்ளை - காங்கிரசு 
                        2. 1957 - (தனி)இளையபெருமாள் - காங்கிரசு 
                        3. 1962 - (தனி)கனகசபை பிள்ளை - காங்கிரசு 
                        4. 1967 - (தனி)மாயவன் - திமுக 
                        5. 1971 - (தனி)மாயவன் - திமுக 
                        6. 1977 - (தனி)முருகேசன் - அதிமுக 
                        7. 1980 - (தனி)பி. குழந்தைவேலு - திமுக 
                        8. 1984 - (தனி)வள்ளல்பெருமான் - காங்கிரசு 
                        9. 1989 - (தனி)வள்ளல்பெருமான் - காங்கிரசு 
                        10. 1991 - (தனி)வள்ளல்பெருமான் - காங்கிரசு 
                        11. 1996 - (தனி)வி. கணேசன் - திமுக
                        12. 1998 - (தனி)ஆர். எழுமலை - பாமக 
                        13. 1999 - (தனி)எ. பொன்னுச்சாமி - பாமக 
                        14. 2004 - (தனி)எ. பொன்னுச்சாமி - பாமக 
                        15. 2009 - (தனி)தொல். திருமாவளவன் - விடுதலை சிறுத்தைகள் 
                        16. 2014-(தனி) சந்திரகாசி-அதிமுக

                        அரக்கோணம் 77-2014

                        இங்கு வென்றவர்கள்
                        1. 1977 - ஓ.வி. அழகேசன் - காங்கிரசு முதலியார் 
                        2. 1980 - ஏ.எம். வேலு - காங்கிரசு முதலியார்
                        3. 1984 - ஆர். ஜீவரத்தினம் - காங்கிரசு முதலியார்
                        4. 1989 - ஆர். ஜீவரத்தினம் - காங்கிரசு முதலியார்.
                        5. 1991 - ஆர். ஜீவரத்தினம் - காங்கிரசு முதலியார்
                        6. 1996 - ஏ.எம். வேலு - தமிழ் மாநில காங்கிரசு முதலியார்
                        7. 1998 - சி. கோபால் - அதிமுக  முதலியார்
                        8. 1999 - ஜெகத்ரட்சகன் - திமுக வன்னியர் 
                        9. 2004 - இரா. வேலு - பாமக வன்னியர் 
                        10. 2009 - ஜெகத்ரட்சகன் - திமுக வன்னியர் 
                        11. 2014-கோ.அரி-அதிமுக   வன்னியர்

                        மத்திய சென்னை 77-2014

                        இங்கு வென்றவர்கள்
                        1. 1977-80 - பா. ராமச்சந்திரன் - ஜனதா கட்சி நாயுடு 
                        2. 1980-84 - ஏ. கலாநிதி - திமுக.
                        3. 1984-89 - ஏ. கலாநிதி - திமுக.
                        4. 1989-91 - இரா. அன்பரசு - காங்கிரசு வன்னியர் 
                        5. 1991-96 - இரா. அன்பரசு - காங்கிரசு.வன்னியர் 
                        6. 1996-98 - முரசொலி மாறன் - திமுக இசை வேளாளர் 
                        7. 1998-99 - முரசொலி மாறன் - திமுக இசை வேளாளர்
                        8. 1999-04 - முரசொலி மாறன் - திமுக இசை வேளாளர்
                        9. 2004-09 - தயாநிதி மாறன் - திமுக இசை வேளாளர்
                        10. 2009 - தயாநிதி மாறன் - திமுக இசை வேளாளர்
                        11. 2014-விஜயகுமார் -அதிமுக
                        தென் சென்னை 57-2014
                        இங்கு வென்றவர்கள்
                        1. 1957-62 - டி.டி.கிருஷ்ணமாச்சாரி - இந்திய தேசிய காங்கிரசு அய்யங்கார் 
                        2. 1962-67 - நாஞ்சில் கி. மனோகரன் - தி.மு.க இல்லத்துப்பிள்ளைமார்
                        3. 1967-69 - பேரறிஞர் அண்ணாதி.மு.க முதலியார் 
                        4. 1971-77 - முரசொலி மாறன் - திமுக இசை வேளாளர் 
                        5. 1977-80 - இரா. வெங்கட்ராமன் - இந்திய தேசிய காங்கிரசு அய்யங்கார் 
                        6. 1980-84 - இரா. வெங்கட்ராமன் - இந்திய தேசிய காங்கிரசு அய்யங்கார் 
                        7. 1984-89 - வைஜயந்தி மாலா பாலி - இந்திய தேசிய காங்கிரசு அய்யங்கார் 
                        8. 1989-91 - வைஜயந்தி மாலா பாலி - இந்திய தேசிய காங்கிரசு அய்யங்கார் 
                        9. 1991-96 - ஆர்.ஸ்ரீதரன் - அ.தி.மு.க.
                        10. 1996-98 - த.இரா. பாலு - தி.மு.க முக்குலத்தோர்.
                        11. 1998-99 - த.இரா. பாலு - தி.மு.க முக்குலத்தோர் 
                        12. 1999-04 - த.இரா. பாலு - தி.மு.க முக்குலத்தோர் 
                        13. 2004-09 - த.இரா. பாலு -தி.மு.க முக்குலத்தோர் 
                        14. 2009      - சி. இராஜேந்திரன் - அ.தி.மு.க யாதவர் 
                        15. 2014     -  ஜெயவர்த்தன்-அ.தி.மு.க
                        வட சென்னை 57-2014
                        இங்கு வென்றவர்கள்
                        1. 1957-62 - அந்தோணி பிள்ளை - சமூக கட்சி.
                        2. 1962-67- டாக்டர் பி. சீனிவாசன் - காங்கிரசு.
                        3. 1967-71 - நாஞ்சில் கி. மனோகரன்- திமுக இல்லத்துப்பிள்ளைமார்
                        4. 1971-77 நாஞ்சில் கி. மனோகரன்- திமுக இல்லத்துப்பிள்ளைமார்
                        5. 1977-80 - ஏ. வி. பி. ஆசைத்தம்பி - திமுக நாடார் 
                        6. 1090-84 - ஜி. லட்சுமணன் - திமுக. 
                        7. 1984-89 - என்.வி.என். சோமு - திமுக முதலியார் 
                        8. 1989-91 - தா. பாண்டியன் - இந்திய தேசிய காங்கிரசு முக்குலத்தோர் 
                        9. 1991-96 - தா. பாண்டியன் - இந்திய தேசிய காங்கிரசு முக்குலத்தோர் 
                        10. 1996-98 - என்.வி.என்.சோமு - திமுக முதலியார் 
                        11. 1998-99 - செ. குப்புசாமி - திமுக.
                        12. 1999-04 - செ. குப்புசாமி- திமுக.
                        13. 2004-2009 செ. குப்புசாமி- திமுக.
                        14. 2009 - டி.கே.எசு. இளங்கோவன் - திமுக முக்குலத்தோர் 
                        15. 2014-வெங்கடேஷ்பாபு-திமுக

                        • மேட்டூர் 67-1971

                        மேட்டூர்
                         1967 MetturKandappan,Shri SubbanarayanDMK
                        1971 MetturBhuvarahan,Shri Irruppu GovindaswamyCongress