வரலாற்றுப் பேரறிஞர் சதா சிவ பண்டாரத்தார்
தி.வை.சதாசிவ பண்டாரத்தார் (ஆகஸ்ட் 15, 1892 - ஜனவரி 2, 1960) ஒரு தமிழ் வரலாற்றாளர்.கும்பகோணம் அருகே திருப்புறம்பியத்தில் வைத்தியலிங்கப் பண்டாரத்தாருக்கும், மீனாட்சியம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். 1910 ஆம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், வலம்புரி பாலசுப்பிரமணியப் பிள்ளை ஆகியோரிடம் தமிழ் இலக்கியமும் இலக்கணமும் கற்றுத் தேர்ந்தார். பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் தாலுகா அலவலகத்திலும் கும்பகோணம் உயர்நிலைப்பள்ளியிலும் சில ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் வாணதுறை உயர்நிலைப் பள்ளியில் 25 ஆண்டுகள் (1917-1942) தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். பணியில் இருந்த பொது “செந்தமிழ்” என்ற மாத இதழில் இவரது கட்டுரைகள் வெளியாகின. 1930 ஆம் ஆண்டு “முதலாம் குலோத்துங்க சோழன்” என்ற முதல் நூல் வெளியானது. 1942-1953, 1953-60 காலகட்டங்களில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழாராய்ச்சித் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். பல இடங்களுக்கும் சென்று சோழர் வரலாற்றை ஆய்வு செய்து “பிற்கால சோழர் சரித்தரம்” என்னும் பெரு நூலை எழுதினார். இது மூன்று தொகுதிகளாக 1949, 51 மற்றும் 61 ஆம் ஆண்டுகளில் வெளியானது. இரு தமிழ் இலக்கிய வரலாறு நூல்களும், பல தல வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார். தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடமையாக்கியுள்ளது
No comments :
Post a Comment