உடுமலைப் பேட்டைக்கு அருகில் உள்ள சின்னஞ்சிறிய கிராமம் பூளவாடி.
தொழில்தான் எனக்கு சாதி என்று தன்னுடைய பெயரை "நாராயணகவி" என்றே மாற்றிக் கொண்டார் அந்த ஊர் இளைஞர்.
வெள்ளை அரசை எதிர்த்து சுதந்திர இயக்கங்களில் இணைந்து அவர் இயற்றிய பல புரட்சிக்கவிகள் அவரை புரட்சிக்கவிஞர் என்று தான் அடையாளம் காட்டின.
பாரதியாரின் நட்பு, பாமர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் சீர்திருத்தக் கருத்துக்களை இயற்ற வைத்தது. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு "கிந்தனார்" கதாகாலட்சேபமும் எழுதியதால் கலைவாணரின் குருவானவர்.
அண்ணாவின் "வேலைக்காரி", "நல்லதம்பி", "ஓர் இரவு", கலைஞரின் "பூம்புகார்", "பராசக்தி", "மனோகரா", மேலும் "தூக்குத்தூக்கி", "இரத்தக்கண்ணீர்", "தேவதாஸ்" என்று ஏராளமான சினிமா படங்களுக்கும் சேர்த்து இவர் எழுதிய பாட்டுக்கள் ஏறத்தாழ பத்தாயிரத்துக்கும் மேல். அத்தனையையும் வெற்றிப்பாடல்கள்.அதனால் கோடம்பாக்கத்து "கவிராயர்" என்றே அழைக்கப்பட்டவர்.
இத்தனை சிறப்புக்களைக்கொண்ட உடுமலை நாராயணகவியை தமிழகத்திற்கு கொடுத்துப் பெருமைப்பட்டுக் கொண்டது "24மனை தெலுங்குச் செட்டியார்" சமூகம்.
விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, தஞ்சாவூரும் மதுரையும் நாயக்க மன்னர்கள் வசம் வந்தது. இந்த சமயம் நிறைய தெலுங்கு பேசும் திராவிட இனமக்கள் மதுரை, தஞ்சாவூர்,கோவை போன்ற பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வரத்தொடங்கினர்.
அப்படி வந்தவர்கள்தான் 24 மனை தெலுங்குச்செட்டியார்கள் என்கிறார்கள்.
அப்படி வந்தவர்கள்தான் 24 மனை தெலுங்குச்செட்டியார்கள் என்கிறார்கள்.
வீட்டில் தெலுங்கு பேசினாலும், இவர்களது ஆதார மொழி தமிழ்தான்.
தமிழ்ப்பண்பாட்டில் 24 மனைச்செட்டியார்களின் வாழ்வியல் முறையும், கலாச்சாரமும் பிரிக்க முடியாததாகி விட்டது. குலதெய்வமாக காமாட்சி அம்மனை வழிபடுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் ஞாயிறு அன்று காஞ்சியில் இச்சமூகத்தின் சார்பில் ஆராதனை விழா நடத்தப்பட்டு வருகிறது.
24 மனை என்பது 24 கோத்திரத்தைக் குறிப்பிடுகிறது.
இதில் 8 கோத்திரம் பெண்வீடு என்றும்,
16 கோத்திரம் ஆண்வீடு என்றும் பிரிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்குள் திருமண உறவு என்பது 8 வீட்டார் 16 வீட்டாருடன் மட்டுமே வைத்துக் கொள்ள முடியும்.
8 வீட்டார் 8 வீட்டாருக்குள்ளோ, 16 வீட்டார் 16 வீட்டாருக்குள்ளோ திருமண பந்தம் வைத்துக்கொள்ளக்கூடாது. அது பங்காளிகளாக கொள்ளப்படுகிறது.
இந்த சிறப்பான முறை இந்த சமூகம் தோன்றியதிலிருந்து கடைபிடிக்கப்படுகிறது.
இவர்களது திருமணத்தில் தாய்மாமனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். திருமணசபையில் வைத்து, தாய்மாமனின் சம்மதம் பெற்ற பின்னரே மணமகனை மணமகளுக்குத் தாலி கட்ட வைக்கிறார்கள். பெரியதனத்தார், நாட்டாமை அல்லது தலைவர் ஆகியோர் முன்னிலையிலேயே திருமணம் நடக்கிறது. தமிழ்நாடு முழுக்க இவர்கள் பரவி இருக்கிறார்கள். என்றாலும்
- மதுரை
- தேனி
- திருச்சி
- கோவை
- திருநெல்வேலி
- இராமநாதபுரம்
- சென்னை
வியாபார நுணுக்கங்களை தமிழக மக்களுக்குக் கற்றுத் தந்தவர்களில் இச்சமூகத்தார் குறிப்பிடத்தக்கவர்கள்.
சுதந்திரப் போராட்டத்தைப் பொறுத்தவரை 24 மனைச் செட்டியார்களின் பங்கு குறிப்பிடத்தக்கதாக உள்ளது. உடுமலை நாராயணகவி போன்றோர் விடுதலைக்காகப் பாடுபட்டவர்கள். காந்தியடியகளின் சத்யாகிரகம், ஒத்துழையாமை இயக்கங்களில் பங்கு கொண்டு சிறை சென்றவர்கள் பட்டியல் அதிகம். அவையெல்லாம் முறையாக தொகுக்கப்படாமல் இருக்கின்றன. தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை உருவாக்கியவர்கள் 24 மனைச் செட்டியார்கள்.
திமுகவும், அதிமுகவும் எதிர் எதிர் திசைகளில் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருப்பது தமிழக அரசியலுக்கு நல்லதல்ல என்று எண்ணி, பிஜூபட்நாயக் மூலம் இரண்டு கட்சிகளையும் ஒன்று சேர்க்கும் முயற்சி நடைபெற்றது. அதற்காக கலைஞரையும், எம்.ஜி.ஆரையும் சந்திக்க வைத்தனர்.
ஆனால், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத்தலைவர் முசிறிப்புத்தன் தாக்கப்பட்டது, எம்.ஜி.ஆர் மனதை மிகவும் பாதித்துவிட்டது. முசிறிபுத்தன் மேல் இருந்த பற்றின் காரணமாக எம்.ஜி.ஆர். இனி அ.தி.மு.க. தனித்தே செயல்படும் என்று தனித்து இயங்கியதன் விளைவுதான் அதிமுக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த வரலாறு.
முசிறி புத்தன் மூன்று முறை எம்.எல்.ஏ.வாக வெற்றிவாகை சூடியவர். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த கே.சி.பழனிச்சாமி கரூரின் மிகப் பெரிய தொழிலதிபராக வளர்ந்தது அவரது உழைப்பிற்கு கிடைத்த பரிசு. கரூர் எம்.பியாக இருந்து அவர் சாதித்தது பல.
அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், இந்நாள் எம்.எல்.ஏ.வுமான பொள்ளாச்சி ஜெயராமன் 24 மனைச் செட்டியார்களில் குறிப்பிடத்தக்க அரசியல் தலைவர்.
பர்கூர் தொகுதியில் ஜெயலலிதாவை வென்று திமுகவுக்கு வெற்றிக் கனியை தந்தவர் இ.ஜி. சுகவனம். "யானைக்காதுக்குள் புகுந்த எறும்பு" என்று கலைஞரால் பாராட்டப்பட்டவர். இப்போது நாடாளுமன்ற உறுப்பினராகி 24 மனைச் செட்டியார் சமூத்திற்குப் பெருமை சேர்ப்பவர்.
திருவெறும்பூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. இரத்னவேலு உள்ளிட்ட பலர் தமிழக அரசியலில் முன்னணியில் இருந்து வருகிறார்கள்.
முன்னாள் எம்.எல் ஏ. எஸ்.ஜி. விநாயகமூர்த்தி,முன்னாள் எம்.எல்.ஸி. ஈ.எஸ். வெங்கடேசன் போன்றோர் இச்சமூகத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்களே.
24 மனைச் செட்டியார்களில் படித்தவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து "24 ஸ்டார்ஸ் க்ளப்" என்ற பெயரில் சமூக வளர்ச்சிக்காக இயங்கி வருகிறார்கள். இந்த அமைப்பை உருவாக்கிய மதுரை டாக்டர் வி.வி.முத்துசாமி அகில இந்திய கார்டியாலஜிஸ்ட் சங்கத்தின் தலைவராக இருக்கிறார். இதன் மாநில ஒருங்கிணைப்பாளராக இருக்கும் இராஜபாளையம் இரா.பெருமாள், 24 மனை தெலுங்குச் செட்டியார்களின் மாநிலத் துணைத் தலைவராகவும் இருந்து சமூக வளர்ச்சிக்குப் பாடுபட்டு வருகிறார். ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜெ.இராமநாதன் உள்ளிட்ட பலர் உயர் பதவிகளில் இருந்து இச்சமூகத்திற்குப் பெருமை சேர்க்கின்றனர்.
உழைப்பால் உயர முடியும் என்று உணர்த்தும் சமூகமாக பிற சமூகத்தாருடன் சகோதரத்துவமாகப் பழகும் குணம் கொண்டவராக இச்சமூகத்தாரை காண முடிகிறது.
இரா.மணிகண்டன்
நன்றி:- குமுதம்
24மனை தெலுங்குசெட்டிகள் பலிஜா இனத்தை சார்ந்தவர்கள். இவர்கள் செட்டிபலிஜா என்றும் மற்றும் வரலாற்றில் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் விஜயநகர பேரரசு காலத்தில் நாயக்கர் ஆட்சியில் தமிழகத்திற்கு போர் படையுடன் வந்தவர்கள் ஆவார்கள். இவர்கள் வணிகம் உயந்த வகையில் செய்யவும் வந்தனர்கள். இவர்கள் குலத்தொழில் போர்வணிகம் ஆகும். இவர்களை செப்பேடு 24மனையாகசத்திய தெலுங்கு தேசாதிபதிகள் என்று அழைக்கப்டுகிறது.துப்ப குல செஞ்சி நாயக்கர்கள் இவர்கள் இனத்தை சார்ந்தவரே.
ReplyDeleteமுற்றலும் தவறான வரலாறு இருபத்தி நான்கு மனையார் என்று வணிகக்குழு கி பி 3 நூற்றாண்டிலேயே இருந்தவை என்று பல கல்வெட்டுகள் செப்பேடு கூறுகின்றனர
ReplyDeleteநீங்கள் சொல்வது 13ஆம் நூற்றாண்டில் உள்ள சாளுக்கிய சோழர் கல்வெட்டு ஆகும். இதற்கு முன்பே தெலுங்கு பேசும் போர் மற்றும் வணிகம் செய்யும் குடிகள் 3ஆம் நூற்றாண்டில் தொண்டைமண்டலம் வரை குடியேறினர் என்பதற்கு சான்று உண்டு.
DeleteKannan, please give evidence.
Deletehi
Deleteiam same caste 24 manai telugu chettiar
ReplyDelete