Saturday, August 5, 2017

காடுவெட்டி குரு

மாவீரன் காடுவெட்டி குரு


வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு. அவரது சொந்த ஊர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள காடுவெட்டி கிராமம் .
தந்தை காடுவெட்டி ஜெயராமன் தேவர்  தடாலடி பேச்சு மற்றும் பஞ்சயாத்து செய்பவர் துணிச்சல் மிக்கவர்.
1986-ல் காடுவெட்டியில் தி.மு.க-வின் கிளைச் செயலாளராக இருந்தவர் இவர். வன்னியர் சங்கத்தை விரிவுபடுத்துவதற்காக மீன்சுருட்டி எம்.கே.ராஜேந்திரன், விரபோக.மதியழகன் ஆகியோர் குருவை ராமதாஸ் தலைமையில் வன்னியர் சங்கத்தில் இணைத்தனர். பின்பு படிப்படியாக செயற்குழு உறுப்பினர், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டச் செயலாளர் என உயர்ந்தார். பின்பு, வன்னியர் சங்கத் தலைவராக பதவி உயர்வு பெற்றார். 2001-ல் அ.தி.மு.க கூட்டணியில் ஆண்டிமடத்தில் பா.ம.க. சார்பில் நிறுத்தப்பட்டு, முதன் முறையாக சட்டமன்ற உறுப்பினரானார். அதற்கு பிறகு நடந்த 2006 சட்டமன்றத் தேர்தல், 2009 நாடாளுமன்றத் தேர்தல் என அனைத்திலும் தோல்வி. மீண்டும் 2011 ஜெயங்கொண்டத்தில் தி.மு.க கூட்டணியில் வெற்றி பெற்றார். 2016 ஜெயங்கொண்ட சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தார்.

Tuesday, July 11, 2017

ஜெயங்கொண்டம் ஜி.ராஜேந்திரன்

                                                  ஜெயங்கொண்டம் ஜி.ராஜேந்திரன்


ஜி.ஆர் என்கிற ஜி.ராஜேந்திரன்  காங்கிரஸ் கட்சியின் அரியலூர் மாவட்ட தலைவர் நேர்மையானவர்  அனைத்து சமூகத்தவரின் நன்மதிப்பை பெற்றவர்.
 க.ராஜேந்திரன் (வயது 60) அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுகா மீன்சுருட்டி அருகே மேலணிக்குழி கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். இவர், பி.ஏ. படித்து உள்ளார். விவசாயம் செய்து வருகிறார். இவருடைய பெற்றோர் கணபதி-வள்ளியம்மை. ராஜேந்திரனுக்கு கலைசெல்வி என்ற மனைவியும், அசோக் காந்தி, அருண்பாரதி என்ற மகன்களும் உள்ளனர். 1981 முதல் 1989 வரை திருச்சி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவராக இருந்தார். 1996 முதல் 2002 வரை அரியலூர், பெரம்பலூர் மாவட்ட தலைவராகவும், 2013- 2014 வரை மாநில பொதுசெயலாளராகவும் இருந்து உள்ளார். தற்போது அரியலூர் மாவட்ட தலைவராக பதவி வகித்து வருகிறார். மேலும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.ஜெயங்கொண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர்.

Tuesday, July 4, 2017

MGR Cabinet

M.G. RAMACHANDRAN THE CABINET
After the Sixth General Election held in 1977, a new Ministry with Thiru M. G.Ramachandran as Chief Minister was formed on the forenoon of the 30th June 1977. The names of the Ministers with their portfolios are given below: -
1. THIRU M.G. RAMACHANDRAN, Chief Minister:- Minister in-charge of Public, General Administration, Matters relating to Indian Civil Service and Indian Administrative 13 Service Officers, District Revenue Officers, Deputy Collectors, Police, Elections, Passport, Prohibition, Health, Medicine, Religious Endowments, Prevention of Corruption and Industries.
 2. THIRU K. MANOHARAN, Minister for Finance: - Minister in-charge of Finance, Planning, Commercial Taxes and Excise, Revenue and Legislature.
3. THIRU S. RAMACHANDRAN, Minister for Public Works: - Minister in-charge of Public Works, Minor Irrigation including Special Minor Irrigation Programme Works, Mines and Minerals, Iron and Steel Control.
4. THIRU K. NARAYANASWAMY MUDALIAR, Minister for Law: - Minister incharge of Law, Courts Prisons, Legislation on Weights and Measures, Legislation on money lending, Legislation on chits and Registration of Companies.
5. THIRU G.R. EDMUND, Minister for Food and Co-operation:- Minister in-charge of Food, Food Production, Co-operation and Fisheries.
6. THIRU R.M. VEERAPPAN, Minister for Information and Publicity: - Minister incharge of Information and Publicity Film Technology, Tourism Development Corporation and Cinematograph Act.
7. THIRU C. ARANGANAYAGAM, Minister for Education: - Minister in-charge of Education, including Technical Education, Official Language, Approved Schools, Employment and Training.
8. THIRU K. KALIMUTHU, Minister for Local Administration: - Minister in-charge of Municipal Administration, Community Development, Panchayats, Panchayat Unions, Village, Industries, Rural Industries, Project and Rural Indebtedness.
9. THIRU S. RAGHAVANANDAM, Minister for Labour: - Minister in-charge of Labour, Housing, Slum Clearance Board, Statistics, Tamil Nadu Water supply and Drainage Board and Town Planning.
10. THIRU P. SOUNDARAPANDIAN, Minister for Harijan Welfare: - Minister incharge of Harijan Welfare, Backward Classes, Stationary and Printing, Government Press and Hill Tribes.
11. THIRU C. PONNAIYAN, Minister for Transport: - Minister in-charge of Transport, Nationalized Transports, Motor Vehicles Act, Highways and ports.
12. SELVI P.T. SARASWATHI, Minister for Social Welfare: - Minister in-charge of Social Welfare including Women and Children Welfare, Animal Husbandry, Beggars Home, Orphanages, Vigilance Service, Indian Overseas and Refugees and Evacuees. 14
13. THIRU P. KOLANDAIVELU, Minister for Agriculture: - Minister in-charge of Agriculture, Agriculture Refinance, Agricultural Engineering Wing, Agro-Engineering Wing, Milk, Diary Development Corporation and Operation Flood Project.
14. THIRU K. RAJA MOHAMMED, Minister for Handlooms and Textiles: - Minister in-charge of Accommodation Control, News Print Control, and Agro Service Cooperative Societies at Block, District and Apex Level including Federation, Wafts, Textiles, Yarn and Handloom. THIRU S. RAMACHANDARAN, Minister for Public Works was on foreign tour during September 1977 and during his absence, the subjects allocated to him were dealt with by Thiru G.R. Edmund, Minister for Food and Co-operation. With effect from 7th May 1978, Thiruvalargal K.A. Krishnaswamy, S.D. Somasundaram, R. Soundararajan and Thirumathi Subbulakshmi Jagadeesan were appointed as additional members of the Council of Ministers. Consequently, the business of Government of Tamil Nadu was allocated among the Ministers as follows: -
1. THIRU M.G. RAMACHANDRAN, Chief Minister:- Minister in-charge of Public, General Administration, Indian Administrative Service Officers, District Revenue Officers, Deputy Collectors, Police, Passport, Prohibition, Prevention of Corruption, Large Scale Industries, Mines and Minerals.
2. THIRU K. MANOHARAN, Minister for Finance: - Minister in-charge of Finance, Planning and Legislature.
3. THIRU S. RAMACHANDARAN, Minister for Electricity: - Minister in-charge of Electricity, Public Works (Buildings), Iron and Steel Control.
4 THIRU K.A. KRISHNASWAMY, Minister for Co-operation:- Minister in-charge of Co-operation and Registration.
5. THIRU S.D. SOMASUNDARAM, Minister for Revenue: - Minister in-charge of Revenue, Commercial Taxes and Excise.
6. THIRU G.R. EDMUND, Minister for Food and Co-operation:- Minister in-charge of Food, Fisheries, youth Service Crops, Backward Classes, Elections and Ex-Serviceman.
7. THIRU R.M. VEERAPPAN, Minister for Information and Hindu Religious Endowments: - Minister in-charge of Information and Publicity, Film, Technology, Tourism, Tourism Development Corporation, Cinematography Act, Hindu Religion and Charitable Endowments, Forests and Cinchona, 15
8. THIRU K. NARAYANASWAMY MUDALIAR, Minister for Law: - Minister incharge of Law, Courts Prisons, Legislation on Weights and Measures, Legislation on money lending, Legislation on chits and Registration of Companies.
9. THIRU C. ARANGANAYAGAM, Minister for Education: - Minister in-charge of Education, including Technical Education, Official Language, and Employment and Training.
10. THIRU K. KALIMUTHU, Minister for Local Administration: - Minister incharge of Municipal Administration, Community Development, Panchayat, and Panchayat Unions
11. THIRU S. RAGHAVANANDAM, Minister for Labour: - Minister in-charge of Labour, Housing, Slum Clearance Board, Statistics, Tamil Nadu Water supply and Drainage Board and Town Planning and Accommodation Control.
12. THIRU P. SOUNDARAPANDIAN, Minister for Harijan Welfare: - Minister incharge of Harijan Welfare, Stationary and Printing, Government Press, News Paper Control, Hill Tribes and Bonded Labour. 13. THIRU C. PONNAIYAN, Minister for Transport: - Minister in-charge of Transport, Nationalized Transports, Motor Vehicles Act, Highways and ports.
14. THIRU P. KOLANDAIVELU, Minister for Agriculture and Irrigation: - Minister in-charge of Agriculture, Agriculture Refinance, Agricultural Engineering Wing, AgroService, Co-operative Societies, Irrigation including Minor Irrigation.
15. THIRU K. RAJA MOHAMMED, Minister for Rural Industries: - Minister incharge of Rural Industries including Villages, Cottage and Small Industries, Milk and Dairy Development.
16. THIRU R. SOUNDARARAJAN, Minister for Health: - Minister in-charge of Health.
 17. SELVI P.T. SARASWATHI, Minister for Social Welfare: - Minister in-charge of Social Welfare including Women and Children Welfare, Animal Husbandry, Beggars Home, Orphanages, Indian Overseas, Refugees and Evacuees and Correctional Administration
18. THIRUMATHI SUBBULAKSHMI JEGADEESAN, Minister for Handlooms:- Minister in-charge of Handlooms, Khadi, Textiles and Yarn. The subjects "Public Works (Buildings)" and the "Establishment Matters relating to the Public Works Department" dealt with by Thiru S. RAMACHANDARAN, Minister for 16 Electricity were allocated to Thiru K. Manoharan, Minister for Finance, with effect from 8th May 1978 and 18th May 1978 respectively. During June 1978 certain subjects were allocated among certain Ministers and the subjects are indicated below: - 1. THIRU G.R. EDMUND, Minister for Food-Price Control 2. THIRU K. KALIMUTHU, Minister for Local Administration-Rural Indebtedness. 3. THIRU P. KOLANDAIVELU, Minister for Agriculture and Irrigation-Agro Engineering. 4. THIRU K. RAJA MOHAMMED, Minister for Rural Industries-Wakfs. During 1978, Thiru M.G. Ramachandaran, Chief Minister was on a foreign tour and during his absence the subjects allocated to him were distributed among other Ministers as indicated below: - THIRU K. MANOHARAN, Minister for Finance: - Police, Passport and Prevention of Corruption. 2. THIRU S. RAMACHANDARAN, Minister for Electricity: - Public, General Administration, Indian Administrative Service Officers and District Revenue Officers 3. THIRU K.A. KRISHNASWAMY, Minister for Co-operation: - Mines and Minerals. 4. THIRU S.D. SOMASUNDARAM, Minister for Revenue: - Deputy Collectors. 5. THIRU R.M .VEERAPPAN, Minister for Information and Hindu Religious Endowments: - Prohibition. 6. THIRU C. PONNAIYAN, Minister for Transport: - Large Scale Industries During February 1979, the subject "Prohibition" dealt with by Thiru M.G. Ramachandaran, Chief Minister, was re-allocated as follows: - 1. THIRU M.G. RAMACHANDARAN, Chief Minister: - Prohibition, other than grant of liquor permits. 2. THIRU R.M. VEERAPPAN, Minister for Information and Religious Endowments: - Grant of liquor permits. During April-May 1979, Thiru K.Manoharan Minister for Finance was on foreign tour and during his absence; the subjects allocated to him were dealt with by Thiru S. Ramachandaran, Minister for Electricity. 17 During May 1979, Selvi P.T. Saraswathi, Minister for Social Welfare was on foreign tour and during her absence, the subjects allocated to her were dealt with by Thiru S. Raghavanandham, Minister for Labour. During July, 1979, the subject 'Textiles' dealt with by Thirumathi Subbulakshmi Jagadeesan, Minister for Handlooms and Textiles was allocated to Thiru M.G. Ramachandaran, Chief Minister and consequent to this redistribution, the designation of Thirumathi Subbulakshmi Jagadeesan, Minister for Handlooms and Textiles was revised as Minister for Khadi and Handloom. Accordingly the Minister for Khadi and Handlooms was in-charge of Khadi-yarn and Handlooms-yarn and the Chief Minister holding the portfolio of Industries and Textiles was in-charge of all other types of yarn. During July, 1979 Thiru C.Aranganayagam, Minister for Education was on foreign tour and during his absence the subjects allocated to him were dealt with by Thiru S. Ramachandaran, Minister for Electricity. With effect from 26th January 1980, the subject Debt Relief including Legislation on Money Lending and Legislation on Chits dealt with by Thiru K. Narayanaswamy Mudaliar, Minister for Law was allocated to Thiru S.D. Somasundaram, Minister for Revenue and subjects "Large Scale Industries" and "High-Ways" dealt with by Thiru M.G. Ramachandaran, Chief Minister were allocated to Thiru P. Soundarapandian, Minister for Harijan Welfare and Selvi P.T. Saraswathi, Minister for Social Welfare respectively. Consequent to this re-distribution, the designation of Thiru P. Soundarapandian, Minister for Harijan Welfare was revised as Minister for Industries and Harijan Welfare. Consequent on the resignation of Thiru P. Soundarapandian, Minister for Industries and Harijan Welfare, the Subjects dealt with by him were distributed among certain Ministers and the Subjects are indicated below: - 1. Thiru M.G. Ramachandaran . . Large Scale Industries Chief Minister. 2. Thiru G.R. Edmund . . Harijan Welfare, Stationery and printing Minister for Food Government Press, News Print Control, Hill Tribes and Bonded Labour 

Monday, June 26, 2017

வன்னிய தேவர்கள்

வன்னியர் சமூகத்தை சேர்ந்த படையாட்சிகளுக்கு தேவர் என்ற பட்டம் உண்டு இவர்கள் அரியலூர் கடலூர் மாவட்டங்களில் வாழ்கின்றனர்,
ஜெயங்கொண்டம்-மீன்சுருட்டி பகுதியில் இவர்கள் அதிகம் வாழ்கின்றனர் 

தேவர் பட்டங்கள் கொண்ட பிரபலங்கள் 

1.காடுவெட்டி ஜெ.குரு -வன்னியர் சங்க தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், 
2.அமரர் திரு.ரத்தினசாமி தேவர்- மீன்சுருட்டி செல்லியம்மன் கோயில் தர்தர்மகர்த்தா,
3.ஜி.மணிவண்ணன் தேவர்- மீன்சுருட்டி செல்லியம்மன் கோயில் தர்தர்மகர்த்தா,
5.தெய்வத்திரு சீனுவாச தேவர்-சலுப்பை  அழகர் கோயில் தர்தர்மகர்த்தா,

1.அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரம்  அருகே சலுப்பை கிராமத்தில் சலுப்பை அழகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலின் பரம்பரை தர்தர்மகர்த்தா தெய்வத்திரு சீனுவாச தேவர்  ஆவர் ,தற்போது அவரின் வாரிசு தர்தர்மகர்த்தாவாக உள்ளார்.                                               மீன்சுருட்டியில் இருந்து 4.50கிலோமீட்டர் தூரம்





நாவலர் சோமசுந்தர பாரதியார்

நாவலர் சோமசுந்தர பாரதியார் நினைவு நாள் 14.12.1959


‌நாவலர் சோமசுந்தர பாரதியார் நினைவு நாள் 14.12.1959
1937ஆம் ஆண்டு காங்கிரசுக் கட்சி முதன்முறையாகத் தேர்தலில் போட்டியிட்டு பல்வேறு மாகாணங்களில் வெற்றி பெற்றது. அதில் சென்னை மாகாணமும் ஒன்று. அப்போதைய சென்னை மாகாண முதல்வர் இராசாசி வேறு எந்த மாகாண முதல்வரும் செய்யத் துணியாத  காரியமொன்றைச் செய்தார். தொடக்கப் பள்ளிகளில் இனிமேல் இந்தி கட்டாயப் பாடமாக புகுத்தப்படும் என்று அறிவிப்பு செய்தார். அப்போது இந்தித்திணிப்பிற்கு எதிராக முதன்முறையாகத் தமிழறிஞர்கள் ஒன்று கூடிப் போர்க்குரல் எழுப்பினர்.
அக்காலத்தில் முப்பத்தைந்து ஆண்டு காலமாகக் காங்கிரசுக் கட்சிக்குத் தம்மை ஒப்படைத்து இந்திய  விடுதலைக்குப் போராடி வந்த தமிழறிஞர் ஒருவர் அக்கட்சியிலிருந்து வெளியேறி தமிழறிஞர்களோடு இணைந்து போராடினார். அவர் வேறு யாருமல்லர்; நாவலர் என்றழைக்கப்படும் சோம சுந்தர பாரதியார் ஆவார். அவரின் வாழ்க்கை வரலாற்றை இனி காண்போம் .
எட்டையபுரத்து அரசரின் நன்மதிப்பைப் பெற்றுத் திகழ்ந்தவர் சுப்பிரமணிய நாயகர். இவர் சென்னையிலிருந்து எட்டையபுரத்திற்குக் குடிபெயர்ந்து வந்ததால் “எட்டப்ப பிள்ளை ” என்று அழைக்கப்பட்டார் . எட்டப்ப பிள்ளை – முத்தம்மாள் இணையருக்கு மகனாக 27.07.1879 இல் பிறந்தவர்தாம் சோமசுந்தரம்.
எட்டையபுரம் அரண்மனையில் பணியாற்றி வந்த சின்னச்சாமி ஐயரின் மகன் சுப்பிரமணியனும் அரண்மனையில் வளர்ந்து வந்த சோமசுந்தரமும் சிறுவயது முதலே நல்ல நண்பர்கள் .தமிழ் மீதான ஆர்வமே இருவரையும் ஒன்று சேர்த்தது. இருவரும் இணைப் பறவையாய் பரந்த அரண்மனையில் பாடிப் பறந்து வலம் வந்தனர் .
எட்டையபுரம்  அரண்மனைக்கு வருகை தரும் தமிழ்ப் புலவர்களின் பாடல் கேட்டு பா புனையும் ஆற்றலை இருவரும் பெற்றிருந்தனர் . ஒருமுறை யாழ்ப்பாணத்திலிருந்து புலவர் ஒருவர் அரண்மனைக்கு வந்தார் . அவர் இருவரிடமும் சென்று ஈற்றடி கூறி , பாடலொன்றை இயற்றித் தருமாறு வேண்டினார். இருவரும் எழுதுகோல் பிடித்து உடனடியாக அந்த ஈற்றடிக்கு பாடல் தந்தனர். அதனைப் படித்துப் பார்த்த யாழ்ப்பாணப் புலவர் மெய்சிலிர்த்து “இதுவன்றோ , அருமைப்பாடல் ” எனக்கூறி இருவருக்கும் “பாரதி” பட்டம் வழங்கிச் சிறப்பித்தார்.
அன்றுமுதல் சோமசுந்தரம் “சோமசுந்தர பாரதி” என்றும் அழைக்கப்பட்டார் .
1905ஆம் ஆண்டு சென்னையில் சட்டத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற சோமசுந்தர பாரதியார் தூத்துக்குடிக்குச் சென்று வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்டார் . அப்போது வ.உ.சி.யோடு நெருக்கம் கொண்டு பழகியதன் மூலம் இந்திய விடுதலையின் மீது தீராப் பற்றுக் கொண்டார் .
வ.உ.சி.தோற்றுவித்த கப்பல் நிறுவனத்திற்குப் பொறுப்பேற்று செயல்படவும் பாரதியார் துணிந்தார். அதன் காரணமாகவே , வ.உ.சி. “இரண்டு சரக்குக் கப்பலோடு சேர்த்து மூன்றாவதாக ஒரு தமிழ்க் கப்பலும் என்னிடமுண்டே” என்று விளையாட்டாக மற்றவரிடம் பேசுவதுண்டு. அதாவது “எஸ்.எஸ்.பாரதி ” என்பதை (steam ship ) “தமிழ்க் கப்பல் ” என்று வ.உ.சி. விளித்துக் கூறுவது வழக்கம் .
வ.உ.சி.யின் கப்பல் நிறுவனத்தை விட்டு நீங்கினால் பெரும் பதவி கிடைக்குமென்று ஆசை வார்த்தைகளை ஆங்கிலேயர் கூறி வந்தனர் . அவற்றுக்கு சோமசுந்தர பாரதியார் மயங்கிட மறுத்தார். மாறாக,  ஆங்கிலேயர் வ.உ.சி. , சுப்பிரமணிய சிவா ஆகியோர் மீது தொடுத்த இராசதுரோக வழக்குகளை எதிர் கொண்டு வாதாடினார்.
காந்தியடிகள் சென்னைக்கு வந்த போது  அவரை சோமசுந்தர பாரதியார் தூத்துக்குடிக்கு அழைத்துச் சென்று பொதுக் கூட்டங்களில் உரையாற்றும்படி செய்தார். காங்கிரசுப் பேரியக்கத்தில் தான் மட்டுமல்லாது , தம் புதல்வன்   இலட்சுமிரதன் பாரதி , புதல்வி இலக்குமி பாரதி , மருமகன் கிருஷ்ணசாமி பாரதி ஆகியோரை ஈடுபடுத்தி சேவையாற்றும்படி கேட்டுக் கொண்டார் .
1933ஆம் ஆண்டு அண்ணாமலை அரசரின் வேண்டு கோளுக்கிணங்க வழக்கறிஞர் தொழிலைக் கைவிட்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியராக பாரதியார் பொறுப்பேற்றார். அங்கு தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக தமிழ்ப்   பணியாற்றி வந்த காலத்தில்தான் 1937ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு  “தீ” கொழுந்து விட்டெரிந்தது.
10.8.1937இல் இராமகிருஷ்ண மடம் மாணவர் இல்ல விழாவில் உரையாற்றிய முதல்வர் இராசாசி “இந்தியில் பாடநூல்கள் விரைவில் எழுதப்படும் ” என்று அறிவிப்பொன்றை வெளியிட்டார் .
27.8.1937இல் கரந்தை தமிழ்ச் சங்கம் சார்பில் த.வே.உமா மகேசுவரனாரும் , 29.08.1937இல் திருநெல்வேலித் தமிழ்ப் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் மா.வே. நெல்லையப்பப் பிள்ளையும் இராசாசியின் இந்தித் திணிப்பைக் கண்டித்து முதல் குரல் எழுப்பினார். 
அதன் பிறகு இந்தித் திணிப்பிற்கு எதிரான குரலை சென்னையில் தொடங்கி வைத்த பெருமை சோமசுந்தர பாரதியாரையே சாரும். 05. 09.1937இல் சென்னை செளந்தரிய மண்டபத்தில் பாரதியார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு திருவாளர்கள் இரா.பி.சேதுப் பிள்ளை, சுவாமி சகஜானந்தம் , ‘ஜஸ்டிஸ்’ இதழாசிரியர் டி.ஏ.வி.நாதன், சி.என்.அண்ணா துரை, பண்டிதை நாராயணியம்மாள் உள்ளிட்ட எண்ணற்ற தமிழ்ப் பெருமக்கள் வந்திருந்தனர். 
அக்கூட்டத்தின் தலைவராகிய பாரதியார் பின்வருமாறு உரை நிகழ்த்தினார்: “இந்தி மொழி, இலக்கண இலக்கியச் சிறப்பில்லாத வெறுமொழி, அம்மொழி பயிலுவதால் தமிழ் மொழியும், தமிழர் நாகரிகமும் கெட்டு விடும். தமிழ்ப் பள்ளிக் கூடங்களில் இந்தியை கட்டாயப் பாடமாக்குவதைத் தமிழ் மக்கள் முழு வன்மையோடு கண்டித்து ஒழிக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனையும் உடனே தீவிரமாய்ச் செய்திடல் வேண்டும். அதுவே தமிழர் வீரமுடையவர் என்பதைக் காட்டும். அவ் வெதிர்ப்பினால் ஏதாவது கேடு வருமானால் அதனை பெறத் தாம் முன்னணியில் இருப்பேன்” என்று இரத்தம் துடிதுடிக்கப் பேசினார்.
இந்தக் கூட்டத்தின் அடுத்த படிநிலையாக 04.10.1937இல் சென்னை கோகலே மண்டபத்தில் மாபெருங் கூட்டம் நடைபெற்றது. இதில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். “தமிழ்க் கடல் ” மறைமலையடிகள் தலைமை தாங்கிய இக்கூட்டத்தில் பாரதியாரின் உரை கோடை இடியாய் அமைந்தது. 
காங்கிரசுத் தலைவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்பதால் இந்தியைக் கட்டாயப் பாடமாக்குவதா? என்றும், முதல் மந்திரியாருக்கு தமிழ் மக்களுக்கு வாக்குறுதியளிக்க யாதொரு உரிமையும் இல்லையென்றும் கடுஞ்சினங் கொண்டு பேசினார். 
இதில் பரலி சு.நெல்லையப்பப் பிள்ளை, வச்சிரவேல் முதலியார், கே.எம்.பாலசுப்பிரமணியம், சி.என்.அண்ணாதுரை, முத்தையா முதலியார் ஆகியவர்கள் பங்கேற்று உரை நிகழ்த்தினர். இக்கூட்டத்தில் சட்டசபையிலும், நீதிமன்றங்களிலும், கல்லூரிகளிலும், அரசியல் அலுவல் கூடங்களிலும் தாய் மொழியாகிய தமிழ் மொழியிலேயே எல்லாக் காரியங்களும் நடைபெறுதல் வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. 
சென்னையில் நடைபெற்ற தொடர் இந்தி எதிர்ப்பு மாநாடுகள் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக மாவட்டந்தோறும் இந்தி எதிர்ப்பு மாநாடுகள் முளைவிடத் தொடங்கின. பல்வேறு ஊர்களுக்குப் பாரதியாரும் பயணம் மேற்கொண்டு வீர உரையாற்றி மக்களை எழுச்சி கொள்ளும்படி செய்தார்.
‌26.12.1937இல் பாரதியார் தலைமையில் திருச்சியில் நடைபெற்ற சென்னை மாகாண மூன்றாவது தமிழர் மாநாடு இந்தி எதிர்ப்புப் போரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றது. 2500க்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கேற்ற மாபெரும் பேரணி முதன்முறையாக நடைபெற்றது. 
இந்த மாநாட்டில்தான் பெரியாரும் முதன்முறையாக பங்கு கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 
இத்தனை மாநாடுகள் கூட்டியும், தீர்மானங்கள் நிறைவேற்றியும் கட்டாய இந்திப்பாட ஆணையைத் திரும்பப் பெற முடியாது எனும் ஆணவத்தில் இராசாசி உறுதியாய் இருந்தார். மேலும், இந்தி கட்டாயப் பாட ஆணை 21.04.1938இல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிப்பும் செய்தார்.
இந்நிலையிலே, திருச்சியில் 28.05.1938இல் கூடிய மந்திராலோசனைக் கூட்டத்தில் பாரதியார் ” சத்தியாக்கிரகம் அதில் வெற்றி கிடைக்காவிடில் சட்ட மறுப்பு த் தொடங்க வேண்டியதைத் தவிர வேறில்லை” என்று போர் முரசம் கொட்டி முழங்கினார். 
உடனடியாக இந்தி எதிர்ப்பு வாரியம் உருவாக்கப்பட்டது. அதன் தலைவராகப் பாரதியார் அவர்களும், செயலாளராக கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களும், உறுப்பினர்களாக ஈ.வெ.ரா. , உமா மகேசுவரனார், ஊ.பு.செளந்தர பாண்டியன், கே.எம்.பாலசுப்பிர மணியம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 
பாரதியார் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு, நாள்தோறும் மறியல், நாள்தோறும் சிறை என்ற நிலைக்குப் போராட்டம் வளர்ந்தது. தொடர் போராட்டங்கள் இராசாசி அரசை கலங்கடிக்கச் செய்தது. இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் பெரியார் ஈ.வெ.ரா. தலைமையும் இருந்ததால் ஏராளமான தொண்டர்கள் போராடிச் சிறை சென்றனர். பெரியார் ஈ.வெ.ரா. தளைப்படுத்தப்பட்டு பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார். 
இந்தி எதிர்ப்புப் போரின் முடிவில் இரண்டு கோரிக்கைகள் தமிழர்களிடத்தில் வலுப்பெற்று நின்றன. 1) மொழிவழித் தமிழ் மாகாணம்,  2)தமிழ்நாடு தமிழருக்கே , 
இவ்விரண்டு கோரிக்கை உருவாக்கத்திலும் பாரதியாரின் பங்கு அளப்பரியது. தன் வாழ்நாளின் இறுதிவரை இக்கோரிக்கைகளின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார்.
1937ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போரில் தான் மொழிவழி அடிப்படையில் தமிழ்த்தேசிய இனம் தன்னைத்தானே அடையாளங் கண்டது. அப்போராட்டத்தின் மூலமாக உருவான மொழிவழி மாகாணக் கோரிக்கையும், தமிழ்நாடு தமிழருக்கே முழக்கமும் அப் போராட்டத்தில் ஈடுபட்ட பெரியார் அவர்களால் (பெல்லாரி சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு) திராவிடன், திராவிட நாடு என்று மடைமாற்றம் செய்யப்பட்டது.
அந்த இந்தி எதிர்ப்புப் போரில் உருவான தமிழ் மொழி, தமிழின அடையாளத்தை  இழக்க சோமசுந்தர பாரதியாருக்கு மனம் வரவில்லை. பெரியார் உருவாக்கிய ஆரியத்திற்கு எதிர்வகை குறியீட்டுச் சொல்லாகிய திராவிடத்தை சோமசுந்தர பாரதியார் ஒப்புக் கொள்ள மறுத்தார்.  ஆரியர் x தமிழர் என்பதே அவரது கொள்கை நிலைப்பாடாகும்.
1937ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போரில் “தமிழர் கழகம்” எனும் அமைப்பை நிறுவினார். தமிழ்மொழி ஆக்கத்திற்கும், இந்தி எதிர்ப்புக்கும், தமிழர் முன்னேற்றத்திற்கும் வெவ்வேறு பெயர்களில் அமைக்கப் பெற்ற இயக்கத்தினர்களெல்லாம் தமிழர் கழகக் கிளைகளை ஆங்காங்கே அமைக்க வேண்டுமென்று பாரதியார் பேரழைப்புக் கொடுத்தார். பிறகு ‘தமிழர் கழகம்’ எனும் இதே பெயரில் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் அமைப்பைக் கட்டிய போதும் அதன் தலைவராக பாரதியார் பொறுப்பு வகித்தார்.
1942 இல் பெரியாரின் திசை மாறிப்போன ‘திராவிடநாடு திராவிடர்க்கே’ முழக்கம் காதைப் பிளந்து வந்த நிலையில், சி.பா.ஆதித்தனார் ‘தமிழ் இராச்சியக் கட்சி’யை உருவாக்கினார். அப்போது அதனை மனமுவந்து தொடங்கி வைத்தவரும் பாரதியார் என்பது நினைவு கூரத்தக்கது.
நீதிக்கட்சியில் பெரியார், அண்ணா இருந்த போதும், தி.மு.க.வை அண்ணா உருவாக்கிய போதும் திராவிடம் குறித்தத் தமது மறுப்புக் கருத்தை பாரதியார் வெளிப்படுத்திய தருணங்கள் பல உண்டு.  
14.3.1943இல் சேலத்தில் நடந்த ‘கம்பராமாயண எரிப்புப் போர்’ உரையாடலின் இறுதிப் பகுதியில் பாரதியார் கூறுகிறார்: 
“தமிழன் தன்னைத் தமிழெனன்று கூறிக் கொள்ள வெட்கப்பட்டுத் திராவிடன், திராவிடன் என்று தோள் குலுக்குவதா? திராவிடன் என்ற பெயர் சங்க நூலிலே ஏது? சுயமரியாதை, சுயமரியாதை என்று ஆரியமொழி பேசினார்கள். நான் சொல்லிச் சொல்லி இப்போதுதான் தன்மானம் என்று தமிழாகப் பேசுகிறார்கள்” என்று இடித்துரைத்தார்.
1950ஆம் ஆண்டு மே மாதம் 27, 28 நாட்களில் கோவையில் தி.மு.க. சார்பில் ‘முத்தமிழ் மாநாடு’ நடைபெற்றது. அதில் மாநாட்டுத் திறப்பாளராக கலந்து கொண்ட பாரதியார் அவர்கள் மீண்டுமொரு முறை திராவிடத்தின் மீது குட்டு வைத்துப் பேசினார். அது வருமாறு:
“இந்நாளில் பலர் திராவிடர், திராவிடர் என்றே சொல்லி வருகிறார்கள். தமிழ், தமிழர் என்று சொல்ல வெட்கப்படுகிறவன் தமிழனாயிருக்க முடியுமா? அவன் இரத்தத்திலே எப்படி தமிழ் இரத்தம் ஓடும்? இனியாவது தமிழ் தமிழர் என்று சொல்லுங்கள். தமிழருக்குத் தமிழரே பகைவர் ” என்றார்.
பாரதியாருக்கும் ஒரு படி மேலே சென்று அம்மாநாட்டிலே தூய தமிழ்க் காவலர் கு.மு.அண்ணல் தங்கோ ‘திராவிடம்’ என்ற சொல்லைக் கேட்டாலே காதில் நாராசம் பாய்ச்சியது போல இருக்கிறது என்று சொன்னாரே பார்க்கலாம். அண்ணாவோ பதைபதைத்துப் போனார். முத்தமிழ் மாநாடு திராவிடத்திற்கு விளக்கம் சொல்லும் மாநாடாக மாறிப் போனது.
1953ஆம் ஆண்டு அண்ணல் தங்கோ தமிழக எல்லைத் தற்காப்பு மாநாட்டை நடத்தினார். கருணாநிதி, கி.ஆ.பெ.விசுவநாதம், பாரதிதாசன், கா.அப்பாத்துரையார், டார்பிடோ சனார்த்தனம், திருக்குறள் முனுசாமி ஆகியோர் பங்கு கொண்ட மாநாட்டில் அதன் தலைவராகிய பாரதியார் , 
“நாம் தமிழர்! நமது இனம் தமிழினம்! நமது நாடு தமிழ்நாடு! தமிழ்நாடு தான் நமது குறிக்கோள்! மொழிவழியாகப் பிரிந்து விட்ட போது திராவிடம் என்பதில் பொருள் இல்லை, திராவிடம் என்பது தமிழ்ச் சொல்லே அன்று” 
என்று பேசிய போது கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அதற்குக் காரணம் கூட்டத்திலே பங்கு பெற்றவர்கள் கி.ஆ.பெ.விசுவநாதம் தவிர, மற்ற ஏனையோர் திராவிடச் சார்பாளர்கள் என்பதே உண்மையாகும்.
திராவிட இயக்கத்தவரின் ஆரிய எதிர்ப்பில் உடன்பாடு கொண்டவராக இருந்த போதிலும், அந்த ஆரிய எதிர்ப்பையும் கூட தாம் சுய மரியாதை இயக்கத்தால் கற்றுக் கொள்ள வில்லை என்பதை தெளிவுபடுத்தி கூறவும் பாரதியார் துணிந்தார். அது வருமாறு:
“ஆரியருக்கு அடிமைப்படாத எண்ணம் எனக்கு 40 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டது. சுயமரியாதை இயக்கம் தோன்றுவதற்கு முன்பே இருந்தது. என்னுடைய 14 வயதில் திருமணம் நடைபெற்றது. என்னுடைய சிவநெறி வேறு. இன்று சைவப்பண்டிதர் கூறும் சைவமல்ல, உண்மையே எனக்குச் சிவம். எனக்குத் திருமணம் பார்ப்பனரை வைத்து செய்வதாகக் கூறினார்கள். சைவ ஆகமங்களின் படி பார்ப்பனர்கள் சண்டாளர்கள் என்று கூறப்பட்டிருக்கிறது. கோயில்களிலே அவர்கள் துவஜஸ்தம்பத்துக்கு (கொடி மரத்துக்கு) அப்புறம் நுழையக் கூடாது. வந்தால் தீட்டாகி விடும் என்று ஆகமம் கூறுவதால் அப்படிப்பட்ட சண்டாளர்களைக் கொண்டு திருமணம் செய்யாமல்  சைவ குருக்களை வைத்து திருமணம் செய்தேன். எனது சிறிய வயதிலேயே எனக்கு அந்த நோக்கம் இருந்தது. சுயமரியாதை இயக்கத்தாலோ, அண்ணாதுரையாலோ அந்த நோக்கம் எனக்கும் வரவில்லை. அது முதற்கொண்டு இதுவரை நான் தமிழருக்கு தன்மானம் வரவேண்டுமென்று உழைத்து வந்திருக்கின்றேன்.”
பாரதியார் தமிழ் நூல்களிலே உள்ள ஆரியத்திற்கு வலுசேர்க்கும் கருத்துகளை புறந்தள்ள வேண்டுமென்று வற்புறுத்தும் அதே வேளையில் நல்ல கருத்துகள் இருக்கும் பட்சத்தில் போற்றிடவும் தயங்கக் கூடாது என்பார்.
தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர் நச்சினார்க்கினியர். அறிவாகிய கடவுளுக்கு 6 முகம் உள்ளது, 12 கையுள்ளது என்று கூறுவது எப்படிப் பொய்யோ, அப்படித்தான் நச்சினார்க்கினியர் உரையும். நச்சினார்க்கினியன் உமிழ்ந்த எச்சில் என்றால் அதை நக்கவா வேண்டும்? என்று கடுமையாகச் சாடினார். ( நச்சினார்க்கினியர் ஒரு பிராமணர், தொல்காப்பியத்திற்கு ஆரிய மரபு சார்ந்த சில விளக்கங்கள் தந்தவர்) 
அதே பாரதியார்தாம் அண்ணா கம்ப ராமாயணத்தை எரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது அதை வன்மையாகக்  கண்டித்தார். அப்போது அவர் “ஒரு சிறந்த காவியத்தை எரிப்பது நல்லதன்று. அது தமிழ் நெறியன்று. ஆபாசக்கருத்துகளை எரிக்கச் செய்யப்படும் முயற்சிக்கு வேண்டுமானால் நான் துணை நிற்பேன். அருந்தமிழ் நூலை எரிப்பதால் ஆபாசக் கருத்தை எப்படி அழிக்க முடியும்? கம்பனைப் போல் சிறந்த கவியை கண்டதில்லை ” என்று கம்பனைப் போற்றினார். இன்று கம்பன் கவி நயத்தை, தமிழ் அமுதை கலைஞர் கருணாநிதி உள்ளிட்ட திராவிட இயக்கத்தவர்கள் பலரும் போற்றுவதைப் பார்க்கிறோம். 
தசரதன் குறையும் கைகேயி நிறையும், அழகு சேரர் தாய முறை, சேரன் பேரூர், தமிழும் தமிழரும், திருவள்ளுவர், தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை ஆகியவை நாவலர் சோமசுந்தர பாரதியார் எழுதிய நூல்களில் மிக முக்கியமானவையாகும். 
27.07.1959 அன்று பாரதியாரின் 80வது அகவை நிறைவு விழா மதுரையில் தமிழ்ச்செம்மல் கி.பழனியப்பனார் ( பழ.நெடுமாறன் அவர்கள் தந்தையார்) முயற்சியில் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. 
அந்நிகழ்வே நாவலர் பாரதியாரின் இறுதி நிகழ்வாகும். 14.12.1959இல் அவர் தமது தமிழ் மூச்சை நிறுத்திக் கொண்டார். 
அவர்காட்டிய வழியில் ஆரியத்தை வீழ்த்திட, திராவிடத்தைப் புறந்தள்ளிட , தமிழ்த் தேசியத்தை முன்னெடுத்திட உறுதி ஏற்போம். நாவலர் பாரதியாரை தமிழர்களிடம் கொண்டு செல்வோம். 
நூல் உதவி:
1. தமிழ் வளர்த்த நல்லறிஞர்கள் – குன்றக்குடி பெருமாள்
2. நெஞ்சில் நிலைத்தவர்கள்- கரிகாலன் 
3.செந்தமிழ்ச் செல்வி வெளியீடு ( திங்களிதழ் 1937-1938) 
4.தமிழன் தொடுத்த போர் – மா.இளஞ்செழியன்
5. மறுமலர்ச்சி நூல் நிலையம்
6.நாவலர் ச.சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி, கட்டுரைகள் சொற்பொழிவு 
7.தூய தமிழ்க் காவலர் கு.மு.அண்ணல் தங்கோ – செ.அருள் செல்வன்.
8.தீ பரவட்டும், இராமாயணச் சொற்போர்- பாரி நிலையம்.
#tamilthesiyan

Wednesday, June 21, 2017

நடிகர்களின் சாதிகள்

நடிகர்களின் சாதிய பற்றி தெரிந்து கொள்ளுங்கள் பல பேர் தன் சாதியை முன்னிறுத்தி தான்  நடிக்கின்றனர் 

நாடார் 
  • சரத்குமார்                      - சமத்துவ மக்கள் கட்சித் தலைவர், ex M L A, மற்றும் நடிகர்
  • சீமான்                            - நாம் தமிழர் கட்சி மற்றும் நடிகர்
  • சார்லி                            - நகைச்சுவை நடிகர்
  • ராமராஜன்                     -நடிகர் 
  • ஹாரிஸ் ஜெயராஜ்     -இசையமைப்பாளர்  
  • எ.ஆர்.முருகதாஸ்      - திரைப்பட இயக்குனர்
  • ஹரி                             - திரைப்பட இயக்குனர்
  • வசந்தபாலன்               - திரைப்பட இயக்குனர்
  • வெற்றி மாறன்          - திரைப்பட இயக்குனர்.
  • K S தங்கசாமி             - திரைப்பட இயக்குனர்
  • கனல் கண்ணன்        - திரைப்பட ஸ்டண்டு மாஸ்டர் ,நடிகர்.
  • ஜாக்குவார் தங்கம் -திரைப்பட ஸ்டண்டு மாஸ்டர்
  • ராஜேந்திரநாத்          - திரைப்பட நடிகர்.
  • நான்கடவுள் ராஜேந்திரன் - திரைப்பட வில்லன் நடிகர்.

வன்னியர்
  • ஏ.பி.நாகராசன்             - திரைப்பட இயக்குனர்
  • மறுமலர்ச்சி பாரதி             - திரைப்பட இயக்குனர்
  • தங்கர்பச்சான்                  - திரைப்பட  ஒளிப்பதிவாளர்,நடிகர்,இயக்குனர்
  • சங்ககிரி ராஜகுமாரன்     - திரைப்பட இயக்குனர்
  • சங்ககிரி-ராஜ்குமார்         - திரைப்பட இயக்குனர்(வெங்காயம் ) 
  • சுந்தரம்                             - திரைப்பட இயக்குனர்(திட்டக்குடி)
  • வ.கௌதமன்                   - திரைப்பட இயக்குனர்
  • சந்தானம்                          -நகைச்சுவை நடிகர்,நடிகர்
  • ஜனகராஜ்                          -நகைச்சுவை நடிகர்
  • காளி என். ரத்னம்            -நாடக நடிகர், நகைச்சுவை நடிகர்
  • புஷ்பவனம் குப்புசாமி     -நாட்டுப்புறப் பாடகர்,திரைப்பட பின்னணிப் பாடகர்
  • வடிவுக்கரசி                             -நடிகை
  • தென்கச்சி கோ.சுவாமிநாதன்  -இன்று ஒரு தகவல்
  • தன்ராஜ் மாஸ்டர்                      - இசை ஆசிரியர் (இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரகுமான் குரு  )
  • சின்ன பொன்னுசாமி படையாட்சி -நாடக நடிகர் (நடிகர் சிவாஜின் குரு )

தெலுங்கு ராஜூ
  • விஜய் சேதுபதி -நடிகர்
 தெலுங்கு ரெட்டி 
  • நெப்போலியன் -நடிகர்
  • விஷால் ரெட்டி  -நடிகர்

சௌராஷ்ட்ரர்கள்
  • டி.எம். சௌந்தர்ராஜன் -பாடகர்
  • ஏ.எல். ராகவன்              -பாடகர்
  • எம்.என். ராஜம்
  • எஸ்.சி. கிருஷ்ணன்
  • வெண்ணிற ஆடை நிர்மலா -நடிகர்


பார்க்கவ குலம் 
  • மருதகாசி                -பாடலாசிரியர் 
  • ஏ.கருணாநிதி           -நடிகர் 
  • டி.ராஜேந்தர்             -நடிகர் 
  • டி.ஆர்.சிலம்பரசன் -நடிகர் 

முத்தரையர்
  • பரதன்                -நடிகர் 
  • கவுண்டமணி   -நடிகர்


முக்குலத்தோர் 

  • சிவாஜி கணேசன்          -நடிகர் 
  • ஆர்.முத்துராமன்              -நடிகர் 
  • எஸ்.எஸ்.ராஜேந்திரன்  -நடிகர் 
  • மனோரமா                           -நடிகை 
  • கார்த்திக் முத்துராமன் -நடிகர்  
  • பிரபு                                         -நடிகர் 
  • விவேக்                                 -நடிகர் 
  • எஸ்.எஸ்.சந்திரன்          -நடிகர் 
  • செந்தில்                                -நடிகர் 
  • ஜே.கே.ரித்தீஷ்                  -நடிகர் 
  • அருண்பாண்டியன்        -நடிகர் 
  • மனோஜ்                               -நடிகர் 
  • பாரதி ராஜா                        - திரைப்பட இயக்குனர் 
  • பாலா                                     - திரைப்பட இயக்குனர்
  • எஸ்.ஜே.சூர்யா                - திரைப்பட இயக்குனர்

முதலியார் 
  • ஆனந்தராஜ்                      -நடிகர் 
  • கலைப்புலி  தாணு         -தயாரிப்பாளர் 
  • நடராஜா முதலியார்     -தயாரிப்பாளர் first South Indian feature film
  • டி.ஆர்.சுந்தரம்             -தயாரிப்பாளர், மாடர்ன்  தியேட்டர் 
  • நா.முத்துக்குமார்           -பாடலாசிரியர் 
  • கே.எஸ்.ரவிக்குமார்    - திரைப்பட இயக்குனர்
  • ஜி.வி.பிரகாஷ்  குமார் -இசை அமைப்பளார்
  • தியாகராஜன்                     -நடிகர் 
  • பிரசாந்த்                             -நடிகர் 
  • எம்.கே.ராதா                    -நடிகர் 
  • ஆர்.கே.செல்வமணி   - திரைப்பட இயக்குனர்
  • எஸ்.சங்கர்                         - திரைப்பட இயக்குனர்
  • தேங்காய் சீனிவாசன்   -நடிகர் 
  • பி எஸ்  வீரப்பா                      -நடிகர் 
  • பம்மல் சம்பந்த முதலியார் -நாடக இயக்குனர்
பிள்ளைமார்
  • விஜய் ஆண்டனி    -நடிகர் 
  • சுந்தர்.சி    - திரைப்பட இயக்குனர்
  • வடிவேலு    -நடிகர் 
  • என் எஸ் கிருஷ்ணன்-கலைவாணர் 
  • விஜயகுமார்    -நடிகர் 
  • அருண் விஜய்    -நடிகர் 
  • விஜய்    -நடிகர் 
  • எஸ் எ சந்திரசேகர்    -நடிகர் 

Tuesday, June 20, 2017

கடலூர் அஞ்சலையம்மாள்

பிரசவத்துக்காக ஒரு மாத பரோல் கேட்ட வீரத் தமிழச்சி பற்றி தெரியுமா உங்களுக்கு

தமிழச்சி


சென்னையின் குடிநீர் தாகம் தீர்ப்பதில் கடலூர் வீராணம் ஏரிக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது. அந்த வீராணம் ஏரியிலிருந்து புவனகிரிக்குச் செல்லும் பெரிய வாய்க்காலில் இருந்து தீர்த்தாம்பாளையத்துக்கு பிரிந்துச் செல்லும் கிளை வாய்க்காலுக்கு பெயர் அஞ்சலை வாய்க்கால். இந்தப் பெயர் ஏன் வந்தது என்பது சுவாரஸ்யமான செய்தி. அதைத் தெரிந்துகொள்ளும் முன் அஞ்சலை எனும் பெயருக்கு உரிய வீரம் மிக்க தமிழச்சி யார் எனப் பார்ப்போமா?


அந்நியரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நம் நாட்டுக்கு சுதந்திர சுவாசத்தை மீட்டெடுத்தவர்களில் பெண்களின் பங்கு கணிசமானது. தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் ஏராளம். அவர்களில் குறிப்பிடத் தகுந்த ஒருவர்தான் கடலூர் அஞ்சலையம்மாள்.
கடலூரில் 1890 ஆம் ஆண்டு பிறந்தவர் அஞ்சலையம்மாள். ஐந்தாம் வகுப்பு வரையே படிக்க வாய்ப்பு கிடைத்த இவருக்கு சமகால அரசியல் குறித்து தெரிந்துகொள்வதில் மிகுந்த ஆர்வம். அந்நியரிடம் அடிமைப்பட்டுக் கிடக்கும் நாட்டின் நிலைப் பற்றிய செய்திகளைத் தேடித்தேடி அறிந்துகொள்கிறார். காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை மேற்கொண்டபோது, தன்னையும் அதில் கரைத்துக்கொள்கிறார் அஞ்சலையம்மாள். அதுவே பொதுவாழ்க்கை அவரது எடுத்து வைத்த முதல் அடி.
1857 ஆம் ஆண்டு நடந்த சிப்பாய் கலகத்தில் இந்திய விடுதலைக்காக போராடிய பல்லாயிரக் கணக்கானவர்களைக் கொலைச் செய்ய காரணமாயிருந்த நீலன் சிலை சென்னையில் இருந்தது. இதை அகற்றுவதற்காக சோமயாஜீலு தலைமையில் நடந்த போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றார் அஞ்சலையம்மாள். தான் மட்டுமல்லாமல் தனது ஒன்பது வயது மகள் அம்மாகண்ணுவையும் போராட்டத்தில் கலந்துகொள்ள வைத்தார். வெள்ளையர் அரசு கைது செய்கையில் தாயும் மகளும் சேர்ந்தே சிறைக்குச் சென்றனர். சிறையைக் கண்டு அஞ்சாதவராய் தன் மகளை வளர்த்தார். காந்தியடிகளின் மனம் கவர்ந்தவராக அம்மாகண்ணு மாறினார். காந்தியடிகள் தமிழகம் வரும்போதெல்லாம் அம்மாகண்ணுவைப் பார்க்க விரும்புவார். ஒருமுறை 'லீலாவதி' எனப் பெயர் சூட்டி தனது வார்தா ஆசிரமத்துக்கே அழைத்துச் சென்றுவிட்டார்.
அஞ்சலையம்மாள்
1932-ம் ஆண்டு நடந்த போராட்டத்தில் பங்கெடுத்து, கைதாகி, சிறைச் செல்லத் தயாரானார் அஞ்சலையம்மாள். வேலூர் சிறைக்குள் அவர் நுழைந்தபோது நிறைமாத கர்ப்பிணி. பலரும் அவரைத் தடுத்தும் இந்திய விடுதலைக்காக சிறைச் செல்ல தயக்கம் காட்டவே இல்லை. சிறைக்குள் கடும் வேதனையை அனுபவித்தார். ஒரு மாதம் அவகாசம் கேட்டு வெளியே சென்று வீர மகனைப் பெற்றெடுத்தார். பிறந்து இரு வாரங்களே ஆகியிருந்த பச்சிளம் குழந்தையோடு மீண்டும் சிறைச் சென்றார். கைக் குழந்தையோடு சிறை வாசத்தை ஏற்ற அவரின் உறுதி, அவருக்குத் தண்டனை கொடுத்தவர்களையே கண்டிப்பாக அசைத்திருக்கும். எந்தச் சூழலிலும் தாயக விடுதலைக்கான தன் பயணத்தில் பின் வாங்க தயாராக இல்லை அஞ்சலையம்மாள்.
அஞ்சலையம்மாளைப் பற்றி பேசும்போதெல்லாம் தவறாமல் குறிப்பிடப் படும் சம்பவம் ஒன்று இருக்கிறது. காந்தியடிகளை அஞ்சலையம்மாள் சந்திக்க முடியாத அளவு தடை இருந்த சூழல் அது. அதை மீறியும் காந்தியடிகளைப் பார்க்க வேண்டும் எனும் பேராவல் அஞ்சலையம்மாளுக்கு. அதற்காக பர்தா அணிந்துகொண்டு, தடையை மீறிச் சென்று சந்தித்தாராம். அதனால் தென்னாட்டு ஜான்சி ராணி என்று காந்தி பாராட்டினாராம்.  
அஞ்சலையம்மாளின் வீடு எப்போதும் தொண்டர்களால் நிறைந்திருக்கும். அவர்களுக்கு தன்னால் இயன்ற உணவு உபசரிப்பைச் செய்ய ஒருபோதும் சுணக்கம் காட்டியதில்லை. இந்திய விடுதலைக்குப் பிறகு மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது தொகுதிக்கு உட்பட்ட மக்களுக்கான பல நல்ல திட்டங்களைக் கொண்டு வர கடும் முயற்சி எடுத்தார். அவ்வாறு எடுக்கப்பட்ட ஒன்றுதான் தீர்த்தாம்பாளையத்தின் குடிநீர் பிரச்னையைத் தீர்த்தது. கடுமையான குடிநீர் பஞ்சத்துக்கு ஆளான அக்கிராமத்து மக்கள், நீண்ட தொலைவு சென்று நீர் பிடித்து வர வேண்டியதாயிற்று. அந்தச் சிக்கலுக்கு முற்றுப்புள்ளியாகத்தான் புவனகிரிச் செல்லும் வீராணம் வாய்க்காலிலிருந்து கிளை வாய்க்காலை உருவாக்கி தீர்த்தாம்பாளையத்துக்கு கொண்டு வந்தார். குடிநீர் பிரச்னையும் தீர்ந்தது. அதற்கான நன்றிக் கடனாகவே அஞ்சலை வாய்க்கால் என்று இன்றும் அழைக்கப்படுகிறது.
அஞ்சலையம்மாள் போன்ற வீரப் பெண்மணிகளைப் பற்றி நினைவு கூர்வதும், அவர்களைப் பற்றி அடுத்த தலைமுறைக்கு அறிமுகம் செய்வது மிகவும் அவசியம்.
---நன்றி விகடன்