மாவீரன் காடுவெட்டி குரு
வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு. அவரது சொந்த ஊர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள காடுவெட்டி கிராமம் .
தந்தை காடுவெட்டி ஜெயராமன் தேவர் தடாலடி பேச்சு மற்றும் பஞ்சயாத்து செய்பவர் துணிச்சல் மிக்கவர்.
தந்தை காடுவெட்டி ஜெயராமன் தேவர் தடாலடி பேச்சு மற்றும் பஞ்சயாத்து செய்பவர் துணிச்சல் மிக்கவர்.
1986-ல் காடுவெட்டியில் தி.மு.க-வின் கிளைச் செயலாளராக இருந்தவர் இவர். வன்னியர் சங்கத்தை விரிவுபடுத்துவதற்காக மீன்சுருட்டி எம்.கே.ராஜேந்திரன், விரபோக.மதியழகன் ஆகியோர் குருவை ராமதாஸ் தலைமையில் வன்னியர் சங்கத்தில் இணைத்தனர். பின்பு படிப்படியாக செயற்குழு உறுப்பினர், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டச் செயலாளர் என உயர்ந்தார். பின்பு, வன்னியர் சங்கத் தலைவராக பதவி உயர்வு பெற்றார். 2001-ல் அ.தி.மு.க கூட்டணியில் ஆண்டிமடத்தில் பா.ம.க. சார்பில் நிறுத்தப்பட்டு, முதன் முறையாக சட்டமன்ற உறுப்பினரானார். அதற்கு பிறகு நடந்த 2006 சட்டமன்றத் தேர்தல், 2009 நாடாளுமன்றத் தேர்தல் என அனைத்திலும் தோல்வி. மீண்டும் 2011 ஜெயங்கொண்டத்தில் தி.மு.க கூட்டணியில் வெற்றி பெற்றார். 2016 ஜெயங்கொண்ட சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தார்.